Published : 07 Oct 2016 07:13 AM
Last Updated : 07 Oct 2016 07:13 AM

உலக பல்கலைக்கழக சேவை மையம்: வணிக நோக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டு

சென்னையில் மாணவர்களின் நலனுக்காக தொடங்கப்பட்ட உலக பல்கலைக்கழக சேவை மையம் தற்போது முற்றிலும் வணிக நோக்கில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகப் போரினால் பாதிக் கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் வகையில் உலக பல்கலைக்கழக சேவை மையம் என்ற சர்வதேச அமைப்பு பல்வேறு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின்பு இந்தியாவும் இதில் தன்னை இணைத்துக் கொண் டது. உலக பல்கலைக்கழக சேவை மையத்தின் இந்திய தலைமையகத்தின் பொதுச்செய லாளராக இருந்த வி.என்.தியாக ராஜனின் பெருமுயற்சியால் சென்னை சேத்துப்பட்டில் உள்ள உலக பல்கலைக்கழக சேவை மையம் கடந்த 1970-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு டென்மார்க் அரசு டேனிடா என்ற திட்டத்தின்கீழ் ரூ.20 லட்சமும், தமிழக அரசு நிலமும் வழங்கியது. நன்கொடையாளர்களும் தாராளமாக நிதியுதவி செய்தனர்.

சென்னையில் மாணவர் நலனுக்காகவே தொடங்கப்பட்ட உலக பல்கலைக்கழக சேவை மையம் தற்போது வணிக நோக் கில் செயல்படுவதாகவும் அது ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்துவிட்டது என்றும் வேதனை யுடன் கூறினார் இந்த அமைப்பு உருவாக காரணகர்த்தாவாக இருந்த தியாகராஜன். 80 வயது நிரம்பிய இந்த சமூக ஆர் வலர் சென்னை உலக பல் கலைக்கழக சேவை மையம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் மற்றும் அதன் ஆரம்பக்கால செயல் பாடுகள் குறித்து ‘தி இந்து’ விடம் கூறியதாவது:

உலக பல்கலைக்கழக சேவை மையத்துக்காக கட்டப்பட்ட அடுக்கு மாடி கட்டிடத்தில் மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி, மெஸ் வசதி, மாணவர்கள், மாணவிகளுக்கு தற்காலிக தங்கும் விடுதி, நூலகம், மருத்துவ ஆலோசனை மையம், வங்கி, தபால் அலுவலகம், லேப், எக்ஸ்ரே வசதியுடன் சுகாதார மையம், மாநாட்டுக் கூடம், மாணவர்களின் கலை, இசை ஆர்வத்தை வளர்க்கும் சிறப்பு கலையரங்கம் என 40 விதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. மாணவர்களின் மேம் பாட்டுக்காக தொடங்கப்பட்ட இந்த மையம் தற்போது மாணவர்களின் பங்கேற்பு இல்லாமல் வணிக ரீதியாக செயல்பட்டு வருவது மிகுந்த வருத்தமளிக்கிறது.

மாணவர் மேம்பாட்டுப் பணி கள் அடியோடி நிறுத்தப்பட்டு வாடகைக்கு விடப்படும் கட்டிடமாக அது மாற்றப்பட்டிருக்கிறது. தற் போது சென்னை பல்கலைக் கழக கட்டுப்பாட்டின்கீழ் செயல் படும் இந்த மையத்தின் நிர்வாகத் தில் மாணவர் பங்களிப்பு முற்றிலும் இல்லை. எந்த நோக் கத்துக்காக இந்த மையம் தொடங் கப்பட்டதோ அதிலிருந்து முற்றி லும் விலகி, வணிக ரீதியில் நடத் தப்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. ஆரம்ப காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாண வர் நலன்சார்ந்த திட்டங்களை மீண்டும் கொண்டுவர வேண்டும். ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் அதன் செயல்பாடு அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இந்த மையத்தின் முன்னாள் இயக்குநரும், சென்னை பல் கலைக்கழக தொலைதூரக்கல்வி முன்னாள் துணை இயக்குநருமான ஜமுனா தியாகராஜன். “உலக பல்கலைக்கழக சேவை மையத் தின் நிர்வாகத்தைச் சென்னை பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால் நடை அறிவியல் மருத்துவ பல் கலைக்கழகம் ஆகிய 3 பல் கலைக்கழகங்களும் இணைந்து நடத்த வேண்டும்” என்று யோசனை தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை பல் கலைக்கழக பதிவாளர் பா.டேவிட் ஜவகரிடம் கேட்ட போது, “தற்போது உலக பல்கலைக் கழக சேவை மையம் சென்னை பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வில்லை. மாணவர்கள், ஆசிரி யர்கள் உள்ளிட்டோரைக் கொண்ட ஒரு சுயேட்சையான வாரியம்தான் அதை நிர்வகிக்கிறது. அந்த வாரியத்தின் தலைவராக சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் செயல்படுகிறார். அவ்வளவுதான். மற்றபடி மையத்தின் அன்றாட செயல்பாடுகளில் பல்கலைக் கழகம் நேரடியாக தலையிட முடியாது. அந்த மையத்தைப் பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. தீர்ப்புக்காக காத்தி ருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x