Published : 24 Aug 2022 05:03 AM
Last Updated : 24 Aug 2022 05:03 AM

அரசு விரைவு பேருந்துகளை இயக்க 400 ஓட்டுநர்கள் - தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்ய ஒப்பந்த அறிவிப்பு வெளியீடு

சென்னை: அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்காக 400 ஓட்டுநர்களை தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் பணியமர்த்த விரைவு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஒப்பந்த அறிவிப்பு:

அரசு விரைவு பேருந்துகளை இயக்குவதற்கு கனரக போக்குவரத்து வாகன உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த விரும்பும் அரசுக்குச் சொந்தமான அல்லது அரசு அங்கீகரித்த தனியார் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம், இதற்கான விண்ணப்ப படிவத்தை, சென்னை, பல்லவன் சாலை, விரைவு போக்குவரத்துக் கழக துணை மேலாளரிடம் (உபகரணங்கள்) செப்.12-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்தவிண்ணப்பத்தை செப்.13 பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், பிற்பகல் 3.30 மணியளவில் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும். விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 12 பணிமனைகளில் மொத்தம் 400 ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும். அனைவரும் 24 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். கிளை மேலாளர்வழங்கும் பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.

ஓட்டுநர்களுக்கான விடுப்பு, வருகைப் பதிவு உள்ளிட்டவற்றை தேர்வான ஒப்பந்த நிறுவனம் பராமரிக்க வேண்டும். ஒப்பந்த காலம் குறைந்தபட்சம் ஓராண்டு அல்லது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் கால அளவாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x