Published : 26 Oct 2016 09:50 AM
Last Updated : 26 Oct 2016 09:50 AM

அனைத்துக் கட்சி கூட்டத்தை எதிர்ப்பதற்கு திமுக மீதான காழ்ப்புணர்ச்சியே காரணம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அனைத்துக் கட்சி கூட்டத்தை சில கட்சிகள் எதிர்ப்பதற்கு திமுக மீதான காழ்ப்புணர்ச்சியே காரணம் என்று அக்கட்சியின் பொரு ளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

காவிரி பிரச்சினைக்காக சென்னை அண்ணா அறிவாலயத் தில் நேற்று நடைபெற்ற அனைத் துக் கட்சி கூட்டத்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

காவிரி நடுவர் மன்றம் அமை யவும், நடுவர் மன்றத்தின் இடைக் கால மற்றும் இறுதித் தீர்ப்பை பெறவும் பாடுபட்ட இயக்கம் திமுக என்பதை அனைவரும் அறிவர். காவிரியில் தமிழகத்தின் உரிமை களை நிலைநாட்ட பேச்சுவார்த்தை, அலுவல் ரீதியான கடிதங்கள், நீதிமன்றம் என அனைத்துத் தளங்களிலும் பாடுபட்டவர் திமுக தலைவர் கருணாநிதி.

காவிரியிலிருந்து தமிழகத் துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப் போய்விட்டது. இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

முப்போகம் என்பது ஒருபோக மாக சுருங்கி இப்போது ஒருபோகத் துக்கும் வழியில்லாத நிலை உரு வாகியுள்ளது. காவிரி தண்ணீருக் காக விவசாயிகள் தங்களது உயி ரைப் பணயம் வைத்து அறவழிப் போராட்டங்களை தொடங்கியுள்ள னர். இது பொதுப் பிரச்சினை என் பதால் ஓரிரு அரசியல் கட்சிகளைத் தவிர, தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் விவசாயிகளுடன் இணைந்து போராடி வருகின்றன.

அனைத்துக் கட்சி கூட்டத் தையும், சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தையும் கூட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதி களுடன் பிரதமரை சந்தித்து அழுத்தம் தர வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனா லும் இதனை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை.

திமுக சார்பில் விவசாய அமைப்புகளின் கூட்டத்தை கூட்டி அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நான் நேரில் வழங்கினேன். ஆனாலும் தமிழக அரசு அசைந்து கொடுக்க வில்லை.

கர்நாடகத்தில் ஒற்றுமை..

கர்நாடகத்தில் எதிரும், புதிரு மாக செயல்படும் கட்சிகள் காவிரிப் பிரச்சினையில் ஒன் றிணைந்து செயல்படுகின்றன. கர்நாடகத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதமர், மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் என அனைவரும் ஒரே குரலில் பேசுகின்றனர். இதனைப் பார்த்த பிறகும்கூட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முன்வரவில்லை.

எனவேதான் 5 முறை ஆட்சி யில் இருந்த கட்சி, 89 எம்.எல்.ஏ.க் களை கொண்ட பிரதான எதிர்க் கட்சி என்ற முறையில் திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம்.

ஆனால், இந்த அனைத்துக் கட்சி கூட்டம் வெற்றிகரமாக நடந்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக மீதான காழ்ப்புணர்ச்சியால் அனைத்துக் கட்சி கூட்டத்தை சிலர் எதிர்த்து வருகின்றனர். காவிரிப் பிரச்சினையில் ஒற்றுமை யோடு ஒன்றிணைவதில் சில ருக்கு மனக்கசப்பு. இதனால் ஆக்கப்பூர்வமாக செயல்பட யோசிக்கிறார்கள். இவர்களை சரித்திரம் அடையாளம் காட்டும். இன்று வராதவர்கள் நாளை நம்மோடு வருவார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x