Published : 02 Oct 2016 10:10 AM
Last Updated : 02 Oct 2016 10:10 AM

சென்னை மாநகராட்சி வார்டுகளுக்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சித் தேர்தலில் 59 வார்டுகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் 15 வார்டுகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை அதன் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்தார். வேட்பாளர் விவரம் (வார்டு எண் அடைப்புக் குறி யில் குறிப்பிடப்பட்டுள்ளது) வருமாறு:

எஸ்.பாப்பம்மாள் (1), வி.இந் திரா (3), ஆர்.ஜெயராமன் (4), ஏ.அருமைராஜ் (7), ஆர்.செல்வகுமாரி (8), பெரியசாமி (10), வி.அம்சாபாய் (14), டி.பாபு (20), ஆர்.தாமோதரன் (24), ஏ.அண்ணாதுரை (29), யு.திலகம் (31), ஏ.தமிழ்செல்வி (33), எஸ்.ஏ.வெற்றிராஜன் (36), எம்.ராஜ குமார் (37), என்.திருமுருகன் (38), ஜி.சித்ரா (40), பி.சோமசுந்தரி (41), ஃபரீதா (43), டி.சிந்து (44), அருள் (46) உட்பட மொத்தம் 59 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட வேட்பாளர் விவ ரம்:ஆர்.ஜெயந்தி (41), ஜி.ராஜசேகர் (38), எஸ்.காத்தவராயன் (37), ஆர்.எம்.சந்தோசகுமார் (46), ஜே.சலீமாபீ (48), எம்.சக்கரபாணி (57), இ.சாந்தகுமாரி (94), எஸ்.அமுலு (76), வி.கலைவாணி (123), மைக்கேல்வரதன் (172), கவிதா கோவிந்தன் (180), டி.ஜெயபிரதிபா (181), கே.எஸ்.சீனிவாசன் (190), பத்மாவதி (193), பி.மாரியப்பன் (82).

இதுதவிர, மற்ற மாநகராட்சிகளி லும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கோவை, திருப்பூரில் தலா 18, வேலூர், சேலத்தில் தலா 1, மதுரை, தூத்துக்குடியில் தலா 7, திருநெல்வேலியில் 5, ஈரோட்டில் 3, திருச்சியில் 6, தஞ்சாவூரில் 2 வார்டுகளுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x