Last Updated : 09 Oct, 2016 09:57 AM

 

Published : 09 Oct 2016 09:57 AM
Last Updated : 09 Oct 2016 09:57 AM

தமிழகத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் உள்ளார்களா? - ரகசியமாக கண்காணிக்கும் உளவுத்துறை

தமிழகத்தில் ஐ.எஸ். ஆதரவாளர் களின் நடமாட்டம் உள்ளதா என்று உளவுத்துறை போலீஸார் ரகசியமாக கண்காணித்து வரு கின்றனர்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக புனிதப்போர் தொடுப்போம் என 2014-ல் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் அப்போதைய தளபதி இப்ராஹிம் அவாத் அல் பாத்ரி மிரட்டல் விடுத்தார். இதையடுத்து 2014 டிசம்பரில் ஐஎஸ் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப் பட்டது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் தங்களது ஆதர வாளர்கள் ஊடுருவி இருப்பதாக அந்த அமைப்பு அறிவித்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் ஐஎஸ் ஆதரவாளர்கள் நடமாட்டம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், கேரள மாநிலத் தைச் சேர்ந்த 21 பேர் ஐஎஸ் அமைப்பில் சேர சென்றது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மூலம் இயக்கத்துக்கு ஆட்களை திரட்டி தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்மாநிலங்களில் அசம் பாவிதங்களில் ஈடுபட வாய்ப்புள்ள தாக தேசிய புலனாய்வு அமைப்பினர் சந்தேகித்தனர்.

அதனால், தென் மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில், ஐஎஸ் ஆதரவாளர்களான கேரளா வைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் பதுங்கி இருந்த சுபஹனி காஜா மொய்தீன் என்பவரும் ஒருவர். இவர் ஐஎஸ் அமைப்பு சார்பில் இராக்கில் போரிட்டவர் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். சென்னை கொட்டி வாக்கத்தில் பதுங்கியிருந்த சுவாலிக் முகம்மது என்ற யூசுப் என் பவரும் பிடிபட்டவர்களில் ஒருவர்.

இவருக்கும் சுபஹனி காஜா மொய்தீனுக்கும் உள்ள தொடர்பு என்ன? இருவரும் ஐஎஸ் அமைப்புக்கு மறைமுகமாக ஆட்களை திரட்டினார்களா? யார், யாரை எல்லாம் இவர்கள் தொடர்பு கொண்டார்கள் என என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களில் பதிவாகி உள்ள எண்களை பட்டியலிட்டு, சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள், வெடிகுண்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை எங்கிருந்து சேகரித்தனர், நிதி உதவி எங்கிருந்து வருகிறது என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

தமிழகத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் யாரேனும் இருக்கிறார்களா என்பது குறித்து மாநில உளவுப் பிரிவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் ரகசிய மாக கண்காணித்து வருகின்றனர். சந்தேக நபர்களின் நடமாட்டம் அல்லது சொந்த ஊரில் இருப்ப வர்களின் நடவடிக்கையில் புது மாற்றம் ஏதேனும் இருந்தாலும் அதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உடனடி தகவல் தெரிவிக்கும்படியும் தமிழக போலீஸார் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களில் சட்ட விரோதமாக செயல்படுபவர்களைக் கண்காணிக்க உளவு அமைப்பு உள்ளது. அதேபோல, நக்சல்களை கண்காணிக்க க்யூ பிரிவு போலீஸார் உள்ளனர். இதுதவிர சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க என்ஐஏ, ஐபி உள்ளிட்ட பிரிவுகளும் உள்ளன. தற்போது, அனைவரும் ஒருங்கிணைத்து செயல்பட உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x