Published : 31 Oct 2016 08:57 AM
Last Updated : 31 Oct 2016 08:57 AM

தீபாவளி பண்டிகையின்போது தமிழகத்தில் 781 இடங்களில் பட்டாசு தீ விபத்து: கடந்த ஆண்டைவிட பல மடங்கு அதிகம்

தீபாவளியன்றும் அதற்கு முந்தைய தினமும் பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் 781 பட்டாசு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட பல மடங்கு அதிகமாகும்.

தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் உற்சாகமாக கொண் டாடப்பட்டது. பட்டாசுகளை வெடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கவனக் குறை வாக பட்டாசுகளை வெடிக் கும்போது தீ விபத்துகளும், தீ காயங்களும் ஏற்படுவது வழக்கம். இந்த விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என தீயணைப்பு துறை யினரும், போலீஸாரும் ஏற்கெனவே ஆலோசனை வழங்கி இருந்தனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் 900 தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். 39 தீயணைப்பு நிலையங்கள் தவிர மக்கள் நெருக்கம் அதிகமுள்ள 34 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

தீபாவளி பண்டிகையான சனிக்கிழமை மற்றும் அதற்கு முந்தைய தினத்தில் பட்டாசு வெடித்ததில் தமிழகம் முழுவதும் மொத்தம் 781 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையைப் பொருத்தவரை 141 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

இதில், 24 பேர் காயம் அடைந்துள்ளனர். 2 தினங்களிலும் ராக்கெட் பட்டாசுகள் மூலம் 446 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சாதாரண பட்டாசு மூலம் 335 விபத்துகள் நடந்துள்ளன.

பட்டாசு விபத்து குறித்து மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “2012-ல் 911 பட்டாசு விபத்துகளும், 2013-ல் 301 விபத்துகளும், 2014-ல் 62 விபத்துகளும், 2015-ல் 84 பட்டாசு விபத்துகளும் நடந்துள்ளன” என்றார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகை யில் இந்த ஆண்டு தீ விபத்துகள் பல மடங்கு அதிகமாகியுள்ளன. கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பே மழை பெய்ததால் பல இடங்களில் ஓலை குடிசைகள் உள்ளிட்டவை நனைந்து இருந்தன. எனவே அதிக தீ விபத்துகள் ஏற்படவில்லை. ஆனால், இந்த ஆண்டு மழை தாமதமானதால் பல இடங்களில் பட்டாசு தீ விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x