Published : 24 Oct 2016 10:27 AM
Last Updated : 24 Oct 2016 10:27 AM

ஓராண்டில் 471 பேர் வீர மரணம்: கடும் சவால்களை சந்திக்கும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை- மாற்றங்கள், நவீனமயமாக்கலை எதிர்நோக்கும் வீரர்கள்

உள்நாட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், எல்லை பாதுகாப்புப் படையினர், தேசிய பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட வீரர்களில் 471 பேர் கடந்த ஆண்டில் பல்வேறு சம்பவங்களில் வீரமரணம் அடைந்துள்ளனர்.

எல்லையைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தைப் போல, உள்நாட்டு பாதுகாப்புப் பணியில் மாநில போலீஸார், மத்திய ரிசர்வ் போலீஸார், தேசிய பாதுகாப்புப் படையினர், எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தேசிய புலனாய்வுப் பிரிவினர், சிறப்பு கமாண்டோ படையினர் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். மக்களுடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இவர்கள், பல்வேறு சிரமங்களையும், சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது.

நடைமுறை சிரமங்கள்

உள்ளூர் பாதுகாப்பு, சட்டம்- ஒழுங்கை பாதுகாத்தல், குற்றத் தடுப்பு, போக்குவரத்து சீரமைப்பு, விபத்துத் தடுப்பு, குற்றச் சம்ப வங்களில் ஈடுபட்டவர்கள் மீதான நடவடிக்கை, தலைவர்கள் பாது காப்பு, அந்நிய சக்திகள் ஊடுரு வலைக் கண்காணித்தல் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், நடைமுறைச் சிக்கல்க ளால் இவர்களால் 100 சதவீதம் சரிவர பணியாற்ற முடியவில்லை. பெருகி வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப, போலீஸாரோ அல்லது பாது காப்புப் படையினரோ இல்லை என்பது முக்கியமான காரணம்.

அதிகரித்து வரும் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுப்பது போலீஸா ரின் முக்கியப் பணி என்றாலும், போராட்டங்களுக்கான பாதுகாப்பு, தலைவர்களுக்கான பாதுகாப்பு, போக்குவரத்தைச் சீரமைத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகளில் தினமும் ஈடுபட வேண்டியுள்ளது.

ஆனால், “ஒவ்வொரு நாளும் பணிச்சுமை அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர, அதற்கேற்றாற் போல் காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில் லை. இதனால், 16 மணி நேரம் வேலை பார்ப்பது கூட நிகழ்கிறது. மேலும், சில அதி காரிகளின் நெருக் கடியால் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி றோம்” என்கின்றனர் போலீஸார்.

மேலும், ‘அமைதிப் பூங்கா’ என்ற வார்த்தைக்கெல்லாம் தற்போது அர்த்தமே இல்லாமல் போய்விட்டது. தீவிரவாதம், பயங் கரவாதம், ஜாதி, மத மோதல்கள் உட்பட பல்வேறு சம்பவங்களைத் தினமும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குப் பாதுகாப்புப் படையி னர் தள்ளப்பட்டுள்ளனர். நிறைய படித்த, நவீன தொழில்நுட்பம் தெரிந்தவர்களும் தீவிரவாத, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதால், அவர்களை அடக்கும் பணி சற்று கடினமாகிறது.

மோதல்கள், குண்டுவெடிப்பு உள்ளிட்ட காரணங்களால், இந்தியா முழுவதும் கடந்த 2015 செப். 1-ம் தேதி முதல் நடப்பாண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 471 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 292 போலீஸார், 55 எல்லை பாதுகாப்புப் படையினர், 9 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 41 பேர், ரயில்வே பாது காப்புப் படையைச் சேர்ந்த 13 பேர், உட்பட பல்வேறு பாதுகாப் புப் பிரிவுகளைச் சேர்ந்த 471 வீரர்கள் இறந்துள்ளனர். கடந்த 2014 செப். 1-ம் தேதி முதல் 2015 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை 442 பேர் கொல்லப்பட்ட நிலையில், நடப்பாண்டு 471 பேர் கொல்லப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) டைரக்டர் ஜெனரல் துர்கா பிரசாத் கூறும் போது, “மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் நடப்பாண்டில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதில், வெடிகுண்டு தாக்குதலில் இறந் தவர்கள்தான் அதிகம்” என்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை 2014-ம் ஆண்டு கணக்கெடுப்புப் படி ஒரு லட்சம் பேருக்கு 136 போலீஸார் மட்டுமே உள்ளனர். குறைந்தபட்சம் 180 போலீஸார் இருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைப்படி 220-க்கும் மேற்பட்ட போலீஸார் இருப்பது அவசியம். எனவே, பாதுகாப்புத் துறைக்கு போதுமான ஆட்களை நியமிப்பது டன், குறிப் பிட்ட நேர பணி, விடுப்பு மற்றும் சலுகைகளைச் செய்துதர வேண் டும். ஆளில்லா விமானம், கண் காணிப்புக் கருவிகள், நவீன ஆயு தங்கள் என பாதுகாப்புத் துறையை பலப்படுத்துவ தும் அவசியம் என்பதே வீரர்களின் கோரிக்கை.

மக்களின் ஒத்துழைப்பும் அவசியம்

“போலீஸாருக்கு இணையாக, குற்றவாளிகளும் ஆயுத பலம், தகவல் தொழில்நுட்ப வசதிகளைப் பெற்றுவிடுகின்றனர். இத னால், பாதுகாப்புத் துறையை அதிநவீனமயமாக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல, 8 மணி நேர வேலை, கவுன்சலிங், குடும்ப பாதுகாப்பு வசதிகள், தொழில்நுட்பப் பயிற்சிகள் ஆகியவையும் அவசியம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்த சில நடைமுறைகளை இப்போதும் கடைபிடிப்பதை கைவிட்டு, தற்போதைய காலச் சூழலுக்கேற்ற மாற்றங்களைச் செய்வது அவசியம். அது மட்டுமின்றி, மக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்” என்கின்றனர் போலீஸ் தரப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x