Published : 11 Oct 2016 04:21 PM
Last Updated : 11 Oct 2016 04:21 PM

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வதந்தி பரப்பிய 2 பேர் கைது; 43 பேர் மீது வழக்கு: வதந்தி பரப்புபவர்களை கண்டுபிடிக்க 10 ஐ.டி பணியாளர்கள்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தவறான தகவல் களை பரப்பிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதுவரை 43 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம்விளக்கு அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான வதந்திகள் பரப்பப்படுகின்றன. இதனைத் தடுக்கக்கோரி அதிமுக வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் சென்னை காவல் ஆணையர் அலு வலகத்தில் புகார் கொடுத்தார். ஆன் லைன் மூலமும் பலர் புகார் கொடுத் தனர். இந்தப் புகார்களின் அடிப்படை யில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி, காந்திநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்சர்மா, மதுரை பாண்டியன் நகரை சேர்ந்த மாடசாமி ஆகிய 2 பேரை கடந்த 9-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதாக 153, 505(1), 505(2) ஆகிய 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சதீஷ்சர்மா, எம்.சி.ஏ. படித்து விட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். ஏ.சி. மெக் கானிக்கான மாடசாமி, ‘தமிழ் என்டர்டெய்ன்மென்ட்’ என்ற பெய ரில் முகநூலில் புதிய பக்கத்தை உருவாக்கி, அதில் அப்போலோ மருத்துவமனை பணியாளர்போல பேசி, வதந்தியை பரப்பியிருக் கிறார். இவர்கள் இருவரும் நீதிமன் றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பிய தாக இதுவரை 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

10 ஐ.டி பணியாளர்கள்

முதல்வர் குறித்து வெளிவரும் எந்த ஒரு செய்தியும் வேகமாக பரவி விடுகிறது. இதை கட்டுப் படுத்தவும், வதந்தி பரப்புபவர் களை கண்டுபிடிக்கவும் தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் 10 பேரை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.

நல்ல தகவல்களை விடவும், தவறான தகவல்களே சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவுகின்றன. இதனால் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘வாட்ஸ்-அப்' வந்த பின்னரே இது போன்ற தகவல்கள் வேகமாக பரவு கின்றன.

7 ஆண்டுகள் சிறை

சைபர் கிரைம் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தவறான தகவல் களை பரப்புபவர்கள், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69-வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள். அவர்கள் செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும்.

பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி தவறு செய்தால் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலாக தண்டனை கிடைக்கும். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின் கீழ், சில குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தில்கூட கைது செய்ய முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x