Published : 08 Aug 2022 06:21 AM
Last Updated : 08 Aug 2022 06:21 AM

5 ஆண்டு சட்டப் படிப்பு சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 14 அரசு மற்றும் ஒரு தனியார் சட்டக் கல்லூரிகளில் உள்ள, ஒருங்கிணைந்த 5 ஆண்டு பி.ஏ.. எல்.எல்.பி. படிப்புகளுக்கு 1,731 இடங்கள் உள்ளன.

இதுதவிர, சென்னை பெருங்குடி வளாகத்தில் அமைந்துள்ள சீர்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டு ஹானர்ஸ் படிப்புக்கு 624 இடங்கள் உள்ளன. இவை நடப்பாண்டு இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 12-ல் தொடங்கி, 29-ம் தேதி வரை நடைபெற்றது.

விண்ணப்பித்தவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்களை, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அந்த விவரங்களை http://www.tndalu.ac.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

இதையடுத்து, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு பணி இன்று (ஆக. 8) முதல்வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்ததும், தகுதியான மாணவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வரும் 13-ம் தேதி வழங்கப்படும். அவ்வாறு ஆணை பெற்றவர்கள், தேர்வுசெய்த படிப்புகளில் ஆகஸ்ட் 16 முதல் 18-ம் தேதிக்குள் சேர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x