Published : 02 Oct 2016 10:24 AM
Last Updated : 02 Oct 2016 10:24 AM

அரசியல் ஆதாயத்துக்காக தேவகவுடா உண்ணாவிரதம்: இல.கணேசன் குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்துக்காகவே தேவகவுடா உண்ணா விரதம் இருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் குற்றம்சாட்டினார்.

மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட உள்ள அவர், வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு நேற்று தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தென் சென்னை மாவட்டத் தலைவர் டால்பின் தர் உள்ளிட்டோர் இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியதாவது:

மத்தியப் பிரதேசத்தில் இருந்து என்னை மாநிலங்களவை உறுப்பினர் பொறுப்புக்கு தேர்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகி யோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்த ரவை எதிர்த்து முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணா விரதம் இருப்பது கண்டனத்துக் குரியது. அரசியல் ஆதாயங்க ளுக்காக அவர் உண்ணாவிரதம் இருக்கிறார். இதை கர்நாடக மக்கள் புரிந்துகொள்வார்கள். வாக்கு வங்கி அரசியலுக்காக அவர் நடத்தும் இந்த போராட் டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு விரைவில் அமைக் கும். அதற்கான அறிவிப்பை பிர தமர் நரேந்திர மோடி வெளியி டுவார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x