Published : 03 Aug 2022 09:05 AM
Last Updated : 03 Aug 2022 09:05 AM

கன மழை எச்சரிக்கையால் ஒரே நாளில் கரை திரும்பிய குமரி மீனவர்கள்

கன்னியாகுமரி மாவட்ட மேற்கு கடல்பகுதியில் உள்ள குளச்சல், முட்டம்,தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு மீன்பிடிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன் பிடி தடைக்காலம் அமலில் இருந்ததால் இரு மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தடைக்காலம் முடிந்ததை தொடர்ந்துகடந்த 1-ம் தேதி அதிகாலையில் விசைப்படகுகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் அன்று முதல் 4ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்தது. குமரி மாவட்ட ஆட்சியரும் மீனவர்கள் கரைதிரும்புமாறு அறிவுறுத்தினார்.

இதனால் வழக்கமாக ஒரு வாரத்துக்கு மேல் கடலில் தங்கி மீன்பிடிக்கும் மீனவர்களில் பெரும்பாலானோர். நேற்று முன்தினம் இரவுக்குள் அவசர, அவசரமாக கரை திரும்பினர். ஒரே நாளில் கரை திரும்பிய குளச்சல் மீனவர்களின் வலையில் கணவாய் மீன்கள் அதிக அளவில் சிக்கியதால் அவர்கள் ஓரளவு திருப்தி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x