Published : 02 Aug 2022 09:43 AM
Last Updated : 02 Aug 2022 09:43 AM

சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை சோதனை

சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியனின் மதுரையில் உள்ள வீடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தி வருகிறது.

தயாரிப்பாளர், விநியோகஸ்தர், ஃபைனான்சியர் மற்றும் திரையரங்கு உரியமையாளர் என பல தொழில்களில் ஈடுபட்டிருப்பவர் ஜி.என்.அன்புச்செழியன். இவரது கோபுரம் சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் திரைப்பட தயாரிப்பு, விநியோகஸ்தம் செய்வதில் ஈடுபட்டுள்ளது.

இவர் மீது திரைத்துறையில் பரவலாக இருக்கும் புகார் கந்துவட்டி. தமிழகத்தில் வெளியாகும் திரைப்படங்களில் எல்லாம் தன் தடம் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படியாவது ஒவ்வொரு படத்திலும் நுழைய முயற்சி செய்வார். பணத் தேவை இருப்பவர்கள் என்றால் எளிதாக இவர் வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள். இவருக்கு உதவியாக இருக்கிறார் இவரது சகோதரர் அழகர்சாமி. இருவரும் சேர்ந்தே கந்துவட்டித் தொழிலை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அன்புச்செழியன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கணக்கில் வராத ரூ.70 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அவர் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று ரெய்டு நடைபெறுகிறது. அண்மையில் வெளியான தி லெஜன்ட் படத்தை அன்புச்செழியன் விநியோகம் செய்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் தான் இன்று ரெய்டு நடைபெற்று வருகிறது. மதுரை காமராஜர்புரத்தில் உள்ள அன்புச்செழியனின் வீடு, அவரது திரையரங்குகள், அலுவலகங்கள், சகோதரர் வீடு, உறவினர்கள் வீடு என்று 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் அன்புச்செழியனின் மகள் சுஷ்மிதாவின் திருமணம் மிக பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x