Published : 20 Jun 2014 10:27 AM
Last Updated : 20 Jun 2014 10:27 AM

அடுத்த மாதம் மீண்டும் மீனவர்கள் பேச்சு: இலங்கை கடற்தொழில் அமைச்சகம் தகவல்

கொழும்பில் நடைபெற்ற இந்திய- இலங்கை மீனவர் இடையேயான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எந்தவிதமான உடன்பாடும் எட்டாத நிலையில், மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தை ஜூலை மாதம் நடை பெறும் என இலங்கை கடற் தொழில் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாயகம் நிமல் ஹெட்டி யாராச்சி நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

தமிழக- இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகை யில் கடந்த மே 12-ம் தேதி கொழும் பில் தமிழக, இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் இரண்டாம்கட்டப் பேச்சுவார்த்தை இரு நாட்டு மீன் துறை அதிகாரிகள் மற்றும் வெளி யுறவுத் துறை அதிகாரிகள் முன்னி லையில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில், தமிழக விசைப்படகு மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வாருதல் (trawling) மீன்பிடி மற்றும் இரட்டை மடி போன்ற மீன்பிடி முறை களைப் பயன்படுத்தி இலங்கை கடற் பரப்பில் மீன்பிடிக்கக் கூடாது என இலங்கை மீனவப் பிரதிநிதிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது.

இலங்கை பிரதிநிதிகள் மறுப்பு

ஆனால் இந்த மீன்பிடி முறையை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு கால அவகாசம் வேண்டும் எனவும், இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாள்களுக்கு மீன்பிடிப்பதற்குப் பதில் 90 நாள்களாக குறைத்துக் கொள் கிறோம் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை இலங்கை பிரதிநிதிகள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இதனால் கொழும்பில் நடைபெற்ற 2-ம்கட்ட பேச்சுவார்த்தை சுமுக உடன் பாட்டை எட்டமுடியாமல் போனது.

இந்நிலையில் கொழும்பில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தி யாளர்கள் சந்திப்பின்போது இலங்கை கடற்தொழில் அமைச்சக செய்தி தொடர்பாளர் நாயகம் நிமல் ஹெட்டியாராச்சி கூறியது:

இலங்கை-இந்திய மீனவர்களின் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் (ஜூலை) மீண்டும் தொடங்கும் என எதிர்பார்த்துள்ளோம்.

இம்முறை இரு நாடுகளின் உயர் அதி காரிகள் நிலையிலான பேச்சு வார்த்தை நடைபெறும். இரு நாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரை யாடி தீர்மானமொன்று பெறுவது சாத்தியமற்றது என்பதால் அதிகாரி கள் அளவிலான பேச்சுவார்த்தை களை முன்னெடுக்கத் தீர்மானித் துள்ளோம்.

மேலும் இந்தியாவில் வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்கள் இந்த வாரம் விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x