Published : 15 Jul 2022 12:33 PM
Last Updated : 15 Jul 2022 12:33 PM

கரூர் | இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் கட்டுமான பணிக்கு இடையூறு: ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

கரூர்: கரூர் தோரணக்கல்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் கட்டுமானப் பணிகளை தடுத்த முன்னாள் நகராட்சி உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் ராயனூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. தோரணக்கல்பட்டியில் உள்ள மந்தை நிலத்தில் மறுவாழ்வு முகாம் கட்டுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் இங்கு செய்யப்பட்டன. ஆட்சி மாற்றத்தால் பேருந்து நிலையம் வருவது நின்றுப்போனது.

இந்நிலையில் இங்கு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளதாக வந்த தகவலையடுத்து கரூர் திருமாநிலையூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 2 பங்கேற்ற நிகழ்ச்சிக்கு முந்தைய நாளான ஜூலை 1ல் அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் வீரசக்கதேவி கோயில், மக்களின் வாழ்வாதாரமாக மந்தை நிலங்கள் அமைத்துள்ளன.

கரூர்தோரணக்கல்பட்டியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

இவற்றில் மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மறுவாழ்வு முகாம் அமைக்கக்கூடாது என்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் சார்பில் தோரணக்கல்பட்டி, கொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதியில் வாழும் பகுதிகளில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தனர்.

கரூர்தோரணக்கல்பட்டியில் இலங்கை தமிழர்மறுவாழ்வு முகாம்கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள இடம்.

இந்நிலையில் தோரணக்கல்பட்டி பகுதியில் மறுவாழ்வு முகாம் கட்டுமான பணிக்காக பொக்லைன் மூலம் நேற்று பணிகள் தொடங்கியுள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலர் தடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாந்தோணிமலை போலீஸார் கரூர் நகராட்சி முன்னாள் உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, ஏகாம்பரம், சணப்பிரட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் இளங்கோவன் மற்றும் வேலுசாமி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை இன்று (ஜூலை 15) கைது செய்தனர்.

மேலும், பாதுகாப்பு பணிக்காக தோரணக்கல்பட்டியில் ஆயுதப்படை மற்றும் உள்ளூர் போலீஸார் 50க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி கீதாஞ்சலி, டிஎஸ்பி முத்தமிழ்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர். சுக்காலியூர் உள்ளிட்ட இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x