Published : 11 Jul 2022 12:27 PM
Last Updated : 11 Jul 2022 12:27 PM

விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட திட்டங்கள்: அனுராக் தாக்கூர் அறிமுகம்

புதுடெல்லி: இந்திய விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருதுகள், தேசிய நலன்கள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றின் திருத்தப்பட்ட திட்டங்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிமுகப்படுத்தினார்.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டு வீரர்களுக்கான திருத்தப்பட்ட ரொக்க விருதுகள், தேசிய நலன் மற்றும் ஓய்வூதியம், விளையாட்டுத் துறையின் திட்டங்களுக்கான வலைதளம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி இணையதளம் ஆகியவற்றை இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.

நிகழ்வில் அனுராக் தாக்கூர் பேசியது, “சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கும் திட்டம், விளையாட்டு வீரர்களுக்கான பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய நலன் போன்ற விளையாட்டு வீரர்களுக்கு ரொக்க விருது வழங்கும் திட்டத்தில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் பல முக்கிய திருத்தங்களை கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்களை மிகவும் எளிதில் அணுகுவதற்கு உகந்ததாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றும் நோக்கத்துடன் விளையாட்டுத் துறை இந்தத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலமும், அரசுக்கும் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் மூலமும், அமைப்பு மற்றும் வசதிகள், பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் மற்றும் குறைந்தபட்ச அரசு மற்றும் அதிகபட்ச ஆளுகையில் பிரதமரின் பார்வையை முன்னெடுத்துச் செல்வதன் மூலம் டிஜிட்டல் இந்தியாவை நோக்கிய மற்றொரு வளர்ச்சி இது.

இந்த திருத்தப்பட்ட திட்டங்கள், சாதனை நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கு பலன்களை வழங்க அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை வழங்கும். இப்போது, எந்தவொரு தனிப்பட்ட விளையாட்டு வீரரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப மூன்று திட்டங்களுக்கும் நேரடியாக விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x