Published : 27 May 2016 09:17 AM
Last Updated : 27 May 2016 09:17 AM

எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தியாக ஜாதி உள்ளது: சென்னை நிகழ்ச்சியில் அருந்ததி ராய் கருத்து

எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் சக்தியாக இங்கே ஜாதி உள்ளது என்று அருந்ததி ராய் பேசினார்.

காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் நேற்று முன்தினம் மாலை சிஐடி நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் பேசியதாவது:

இன்று தமிழில் வெளியிடப் படும் பி.ஆர்அம்பேத்கரின் நூலுக்கு நான் எழுதியுள்ள அறிமுகம், ஏற்கெனவே பெரும் அதிர்ச்சி அலைகளை நாடெங்கும் ஏற்படுத்தியது. என் பேச்சை ஊடகங்கள் மாற்றி எழுதிவிடுவ தால், இப்போதெல்லாம் எழுதியே படித்துவிடுகிறேன்.

மனித உரிமை செயல்பாட்டா ளர்கள் பல கிரிமினல் வழக்கு களில் சிக்குவது இப்போது வழக்க மாகிவிட்டது. ஜாதி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. யாரிடம் இந்த நாட்டின் முக்கிய பொறுப்புகள் உள்ளன என்று பாருங்கள். அ ப்போது ஜாதியின் முக்கிய இடம் தெரியும்.

ஊடகத்துறை, மின் உற்பத்தி போன்றவை தனியார் வசம் உள்ளன. ஒடுக்கப்பட்டவர்களின் பொறுப்பில் எந்த நிறுவனமும் இல்லை. எல்லாவற்றையும் கட்டுப் படுத்தும் சக்தியாக இங்கே ஜாதி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமா வளவன் பேசும்போது, ‘‘அயோத் திதாசர், அம்பேத்கர் போன்றோர் இன்னும் முழு பரிணாமத்தோடு அறியப்படவில்லை. காந்தி, நேரு போன்ற இந்தியாவின் மூத்த தலைவர்கள் யாரும் ஜாதி ஒழிப்பைப் பற்றி சிந்திக்காதபோது, அம்பேத்கர்தான் ஜாதி ஒழிப்பு பற்றி சிந்தித்தார். ஒடுக்கப் பட்டவர்கள் அரசியல் அதிகா ரத்தை நுகர முடியாத சூழல்தான் இன்னமும் நிலவுகிறது. கருத்துரு வாக்கத் தளத்தில் செயல்படு வோருக்கு மிகுந்த பொறுப்பு இருக்கிறது. அதை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டிய அவசியம் இன்றைக்கு உருவாகியி ருக்கிறது” என்றார்.

பி.ஆர்.அம்பேத்கர் எழுதி தமிழில் ப்ரேமா ரேவதி மொழி பெயர்த்த ‘ஜாதியை அழித் தொழித்தல்’, உமாதேவியின் ‘தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது’, ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘அயோத்திதாசர் - வாழும் பவுத்தம்’ ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. இவ்விழாவில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், கள பணியாளர் கொடிக்கால் சேக் அப்துல்லாஹ், சுப.உதயகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x