Published : 06 Jul 2022 06:08 PM
Last Updated : 06 Jul 2022 06:08 PM

சென்னையில் ‘பாதுகாப்பற்ற’ 2,302 மரங்கள்: இதுவரை 1,600 மரங்களின் கிளைகள் அகற்றம்

சென்னை: சென்னையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த 1,600 மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கேகே நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மரம் முறிந்து விழுந்து பெண் வங்கி மேலாளர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் மரங்களை அகற்றுவது தொடர்பாக அனைத்து மண்டலங்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று சென்னை மாநகராட்சி சார்பில் பிறப்பிக்கப்பட்டது.

இதில், எந்தெந்த தெருக்கள், சாலைகள் பூங்காக்களில், தாழ்வாக மற்றும் காய்ந்த நிலையில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகள் வெட்டி அகற்ற உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் உள்ள 382 பேருந்து தடை சாலைகள் மற்றும் உள் சாலைகள் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், மழைநீர் வடிகால் பணி நடைபெறும் 118 சாலைகளில் உள்ள 2,699 மரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 2,302 பாதுகாப்பற்ற முறையில் இருப்பது தெரியவந்து. இவற்றில் கடந்த 2-ம் தேதி வரை மொத்தம் 1,614 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளது. மீதம் உள்ள 688 மரங்களின் கிளைகளை அகற்ற சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x