Last Updated : 13 May, 2016 08:59 AM

 

Published : 13 May 2016 08:59 AM
Last Updated : 13 May 2016 08:59 AM

சிறு தகவலுக்கும் முக்கியத்துவம் அளித்த தேர்தல் துறை: ரூ.100 கோடி சிக்கியதன் பின்னணி

தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட அன்று முதல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அன்றிலிருந்தே தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் நிலையான கண்காணிப் புக் குழுவினரின் சோதனை தொடர்ந்தது. இடையில் அதிக அளவில் புகார் வந்ததால், தமிழகத்தில் மட்டும் வருமான வரி புலனாய்வுப் பிரிவினர் சோத னையில் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது, பறக்கும் படை யினரின் எண்ணிக்கை 7ஆயிரத்து 600 என உயர்த்தப் பட்டுள்ளது. எந்த தேர்தல் களிலும் இல்லாத வகையில் ரூ.100 கோடிக்கு மேல் தேர்தல் ரொக்கப்பணம் பறிமுதலாகி உள்ளது. தேர்தலுக்கு 3 நாட் களே உள்ள நிலையில், இறுதிக் கட்டமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதையும் தடுக்கும் முயற்சியில் தேர்தல் துறை ஈடுபட்டுள்ளது.

தேர்தல் விதிமீறல், பணப் பட்டுவாடா தொடர்பான புகார் களை, வாட்ஸ் அப், குறுஞ்செய்தி, கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என தேர்தல் துறை அறிவித்திருந்தது. இதன்படி வரும் சிறு தகவல் களையும் விடாமல் தேர்தல் பறக்கும்படையினர், வருமான வரித் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

பொதுமக்களும் அதிக அளவில் தேர்தல் துறைக்கு தகவல் அளித்து வருகின்றனர். குறிப் பாக கரூரில் அன்புநாதன் வீட்டில் ரூ.4.47 கோடி பிடிக்கப்பட்ட விவ காரத்தில் 20 வாட்ஸ் அப் தகவல்கள் உறுதுணையாக இருந் துள்ளன. நாகை மாவட்டத்தில், பேருந்து ஒன்றில் சிவப்பு புடவை அணிந்த பெண், கையில் உள்ள பையில் ரூ.57 லட்சம் கொண்டு செல்வதாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. சோதனை நடத்தியதில் அந்த பெண்ணிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது போன்ற குறிப்பிட்ட தகவல்கள் தேர்தல் துறையினரை உற்சாகப்படுத்தியுள்ளன. நேற்று முன்தினம், மதுரையில் ஒரு குறிப்பிட்ட நபர் அளித்த 7 தகவல்களில் ஒரு தகவல் உறுதி செய்யப்பட்டு தேடியதில் ரூ.56 ஆயிரம் சிக்கியுள்ளது.

அதேபோல் அரவக் குறிச்சியில், பொதுமக்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்ட பணம் ரூ.68 ஆயிரம் சிக்கியது. இது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

100 சதவீதம் வாக்கு தொடர்பான விழிப்புணர்வுக்காக நாங்கள் உருவாக்கிய கிராமப்புற இளை ஞர் குழுவினர் பல பய னுள்ள தகவல்களை அளிக்கின்ற னர். அவர்கள் அளிக்கும் தகவல் கள் பெரும்பாலும் உறுதியான தாக இருக்கின்றன. 10 தகவல் அளித்தால் 2-ல் பணம் பறி முதலாகிறது. நாங்கள் பறக்கும் படையினரின் எண்ணிக்கையை அதிகரித்த காரணத்தால், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திணறி வருவதாக கூறப்படுகிறது. சில இடங்களில், அரசியல் கட்சிகள் அளிக்கும் பணத்தை பொதுமக்கள் வாங்காமல் திருப்பி அனுப்பிய நிகழ்வும் நடந்துள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x