Last Updated : 03 Jul, 2022 06:31 PM

8  

Published : 03 Jul 2022 06:31 PM
Last Updated : 03 Jul 2022 06:31 PM

ரூ.1000 வழங்கும் கல்வி உதவி திட்டத்திற்கு விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவதில் சிக்கல் : மாணவர்கள், பெற்றோர் புகார்

மதுரை: மூவலூர் ராமாமிர்த்தம் அம்மையாரின் உயர்கல்வி உறுதித் திட்டத்திற்கான விவரங்களை இணைய முகவரியில் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் இருப்பதாக மாணவர்கள், பெற்றோர் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் கல்வியை ஊக்குவிக்க விதமாக திருமண உதவிக்காக திமுக ஆட்சியின்போது, கடந்த 1989-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. தற்போதைய சூழலுக்கேற்ப பொருளாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை அதிகரிக்கும் விதமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியுள்ளது. இதன்மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் ரூ. 1000 உதவித் தொகை வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.

இத்திட்டப்பயணிகளுக்கான தேர்வு ஆன்லைன் மூலம் சேகரிக்கப்படுகிறது. இதற்காக புதிய இணையதள ( ஸ்டூடென்ட் லாக்கின்) முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உள்ளே நுழைந்தால் கல்வி வகை, கல்லூரி செயல்படும் மாவட்டம், கல்லூரியின் பெயர், பாடநெறி, (பாடப்பிரிவு) பாடநெறி காலம், கல்லூரியில் சேர்ந்த ஆண்டு போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் மூலம் உயர் கல்வி உதவித் தொகை பெற தகுதி வாய்ந்த மாணவ, மாணவியர்கள் விவரங்களை பதிவிடு கின்றனர். ஏற்கனவே ஜூன் 30ம் தேதி கடைசி நாள் என்ற நிலையில், மேலும், 10 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மதுரை உள்ளிட்ட சில இடங்களில் ‘ தமிழ் இலக்கியம் ’ உட்பட ஓரிரு பாடநெறிக் குள் ( பாடப்பிரிவு) உள்ளே நுழைய முடியாத நிலை ஓரிரு நாளாகவே தொடர்கிறது. இதன் காரணமாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்ய முடியாத சூழலால் உயர் கல்விக்கான உதவி தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற அச்சம் மாணவர்கள், பெற்றோர் மத்தியில் உருவாகி யுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களை அணுகியபோது, சமூக நலத்துறை மூலமே இத் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மாணவர் களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கையை அத்துறை சார்ந்த அதிகாரிகளே ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக எழும் சந்தேகம், பிரச்னைக்கு அத்துறை அதிகாரிகளி டமே புகார் தெரிவிக்கவேண்டும் கல்லூரிகளில் தரப்பில் கூறுகின்றனர்.

ராஜா(பெற்றோர்) என்பவர் கூறுகையில், ‘‘எனது மகள் மதுரை - திண்டுக்கல் ரோட்டிலுள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை தமிழ் பாடம் படிக்கிறார். அவருக் கான விவரங்களை பதிவெற்றம் செய்யும் போது, பாடப்பிரிவுக்கான காலத்திற்குள் இணை யத்தில் நுழைய முடியவில்லை. கல்லூரி நிர்வாகத் திடம் கேட்டால் விசாரிக்கிறோம் என்கின்றனர். இது தொடர்ந்து தாமதமானால் உயர்கல்விக்கான உதவி பெறுவதில் சிக்கல் ஏற்படும், துரிதமாக சீரமைக்கவேண்டும் ,’’ என்றார்.

சமூகநலத்துறை அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ உயர்கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு நடவடிக்கை எங்களது துறை சார்பில் எடுக்கப்படுகிறது. இது தொடர் பாக நாளை (திங்கள்)கேளுங்கள் சொல்கிறோம்,’’ என்றனர்.

.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x