Published : 28 Jun 2022 06:20 AM
Last Updated : 28 Jun 2022 06:20 AM

அதிமுக அவைத் தலைவர் தேர்வில் விதிமீறல்: தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவரை தேர்ந்தெடுத்தது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது: அதிமுக சட்ட விதிகள் திருத்தப்பட்டு, பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு, தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். கட்சி பொதுக்குழு ஜூன் 23-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக23 தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டன. அதற்கு ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனிடையே, பொதுக் குழுவுக்கு தடை கோரிய வழக்கின் மேல்முறையீட்டை விசாரி்த்த சென்னை உயர்நீதி மன்றம்,ஏற்கெனவே ஒப்புதல் வழங்கப்பட்ட 23 தீர்மானங்களை மட்டும் பொதுக்குழுவில் நிறை வேற்றலாம் என உத்தரவிட்டது.

அதன்பின், 23-ம் தேதி வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கட்சி அவைத் தலைவரை தேர்வு செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதற்கு என்னிடம் அனுமதி பெறவில்லை. கூட்டத்தில் யாருடனும் விவாதிக்காமல், 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படுவதாக சி.வி.சண்முகம் அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக 27-ம் தேதி காலை 10 மணிக்கு தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கூட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களின் கையெழுத்து இடம்பெறவில்லை. இக்கூட்டம் நடத்தியது சட்ட விரோதமானது.

இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x