Published : 12 May 2016 12:45 PM
Last Updated : 12 May 2016 12:45 PM

சாதி ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி

உடுமலையில் படுகொலை செய்யப் பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மேலும் தனது தற்கொலை குறித்து உடு மலை மாஜிஸ்திரேட்டிடம் கவுசல்யா ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை யில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சங்கர், ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது காதல் மனைவி கவுசல்யா படுகாயம் அடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு மார்ச் மாத கடைசியில் வீடு திரும்பினார்.

சங்கரின் குடும்பத்தினருடன் வசித்து வரும் அவர் நேற்று தற்கொலைக்கு முயன்றதாகக் கூறி உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

உடுமலை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் சவுந் திரராஜன் கூறும்போது, ‘‘சாணிப் பவுடரை தண்ணீரில் கலந்து குடித்ததாக மருத்துவர்களிடம் கவுசல்யா தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சங்கர்கிட்டே போகணும்.. சங்கர்கிட்டே போக ணும்.. என்ற வார்த்தைகளையே தொடர்ந்து முணுமுணுத்த கவு சல்யா, வேறு எதுவும் பேச வில்லை. அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப் பட்டார்’’ என்றார். மேலும் கவு சல்யா தற்கொலை சம்பவம் குறித்து குமரலிங்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர் என்றார்.

சிகிச்சை குறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் ஏ.எட் வின்ஜோ கூறும்போது, ‘‘உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை. தொடர்ந்து சில நாட்கள் அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண் டும்”.

கல்லூரியில் படித்து வரும் சங்கரின் சகோதரர் வே.விக்னேஷ் வரன் கூறும்போது, ‘‘நேற்று (நேற்று முன்தினம்) சாப்பிட்டுவிட்டு நானும், எனது தம்பியும் தாத்தா வீட்டுக்கு தூங்கச் சென்றுவிட்டோம். அண்ணி வீட்டுக்குள் தூங்கினார். அப்பா வெளியே தூங்கினார். இன்று காலை (நேற்று) 7 மணியளவில் அப்பா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அண்ணி வாந்தி எடுத்த நிலையில் இருந்துள்ளார். என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டபோது வீட்டில் இருந்த சாணிப் பவுடரைக் கரைத்து குடித்ததாகக் கூறியுள்ளார். யாரிடமும் அதிகமாக அவர் பேசுவது இல்லை. பெரும்பாலான நேரங்களில் தனியாக இருக்கும்போது அழுது கொண்டேதான் இருப்பார். நாங்க ளும் ஆறுதல் கூறி வந்தோம்” என்றார்.

ரகசிய வாக்குமூலம்

கசுசல்யா தற்கொலைக்கு முயன்று உடுமலை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக் கப்பட்ட செய்தியை அறிந்த உடு மலை ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் வித்யா, கவுசல்யாவை சந்தித்து விசாரணை நடத்தினார். அப்போது கவுசல்யாவிடம் இருந்து ரகசிய வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணையின்போது, சங்கரின் குடும்பத்தினர், உறவினர்கள், போலீஸார் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நீடித்தது. மாஜிஸ்திரேட் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு கவுசல்யா பல்வேறு முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

விஷத் தன்மை கொண்ட சாணிப் பவுடர் தாராள விற்பனை

கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் மாட்டுச் சாணத்தை கரைத்து வாசல் தெளிப்பார்கள். சிமென்ட் தரைகளை மெழுகிவிடுவார்கள். அது அவ்வளவு அழகாக சிறப்பாக இருக்காது என்பதால் அதனுடன் மஞ்சள், பச்சை வண்ணத்திலான சாணிப் பவுடர் சேர்க்கிறார்கள். ரசாயனம் கலந்த சாணிப் பவுடர் கரைசல் நீர் தெளிக்கப்பட்ட வாசல் அழகாக இருப்பதுடன், கெட்ட விஷயங்களும் அண்டாது என்பது கொங்கு மண்டல மக்களிடம் உள்ள நம்பிக்கை.

இந்த சாணிப் பவுடரில், பூச்சிகளை விரட்டும் ’போரஸ்’ என்ற விஷத் தன்மையுள்ள ரசாயனம் கலக்கப்படுகிறது. எனவே அதை கரைத்துக் குடித்தோ, விழுங்கியோ உயிரிழப்பவர்கள் அதிகரித்து வருவதால் இதை கடைகளில் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மாநிலம் முழுக்க சாணிப் பவுடர் விற்க தடை இருந்தும் மளிகைக் கடைகளில் தாராளமாக விற்பனையாகிறது. உயிருக்கு ஆபத்தாக முடியும் சாணிப் பவுடர் விற்பனையை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x