Published : 07 Jun 2022 06:04 AM
Last Updated : 07 Jun 2022 06:04 AM

கோவை - ஜபல்பூர் இடையிலான வாராந்திர ரயில் ஆகஸ்ட் வரை நீட்டிப்பு

கோவை: கோவையிலிருந்து மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் இயக்கத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் ஜபல்பூர்-கோவை இடையிலான வாராந்திர ரயில் (எண்:02198) ஜூலை 29-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதேபோல மறுமார்க்கத்தில், திங்கட்கிழமைகளில் இயக்கப்படும் கோவை- ஜபல்பூர் இடையிலான வாராந்திர ரயில் (எண்:02197) ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x