Last Updated : 02 Jun, 2022 06:14 AM

 

Published : 02 Jun 2022 06:14 AM
Last Updated : 02 Jun 2022 06:14 AM

கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: போதிய அளவு நெல், உரம் இருப்பு வைப்பு

கூடலூர்: தேனி மாவட்டம், கம்பம் பள்ளத் தாக்கு முதல்போக சாகுபடிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி நேற்று தண்ணீர் திறந்து வைத்தார்.

விவசாயிகளின் தேவைக்காக நெல், உரம் உள்ளிட்டவை போதி யளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14,707 ஏக்கர் பரப்பளவிலான கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் இருபோக நெல் சாகுபடி நடக் கிறது.

முல்லை பெரியாறு அணையில் 130 அடி நீர்மட்டம் இருக்கும்போது, முதல்போக சாகுபடிக்காக ஜூன் 1-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். சில ஆண்டுகளாக மழை குறைந்து நீர்மட்டம் உயரா ததால் நீர்திறப்பில் தாமதம் ஏற் பட்டது. இதனால், இப்பகுதி விளைநிலங்கள் ஒருபோக சாகு படியாக மாறின. கடந்த ஆண்டு போதிய மழை பெய்ததால், சரியான பருவத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதே போல், இந்த ஆண்டு முதல்போக சாகுபடிக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆட்சியர் க.வீ.முரளீதரன் முன்னிலை வகி த்தார். இந்நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அமைச்சர் இ.பெரியசாமி அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர், அவர் கூறியதாவது: முதல்போக சாகுபடிக்காக விநாடிக்கு 200 கனஅடி நீரும், தேனி மாவட்ட குடிநீர் தேவைக்காக 100 கன அடி என மொத்தம் 300 கன அடி தண்ணீர் 120 நாட்களுக்கு திறந்து விடப்படுகிறது. முதல் போகத்துக்காக இதுவரை 37 டன் நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

மேலும் ஆடுதுறை 54, கோ 52 உள்ளிட்ட பல்வேறு ரக விதைகள் 92 டன் அளவு வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் கிலோவுக்கு ரூ.20 மானியமும், விதை கிராமத் திட்டத்தில் 50 சதவீத மானியமும் அளிக்கப்படுகிறது. உரங்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றார்.

சரியான தருணத்தில் முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்கப் பட்டுள்ளதால், இரண்டாம் போக சாகுபடி உறுதிப்படுத்தப் பட்டுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

கம்பம், ஆண்டிபட்டி எம்எல் ஏக்கள் என்.ராமகிருஷ்ணன், ஆ.மகாராஜன், வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் எம்.சுகுமார், கோட்டச் செயற்பொறியாளர் ந.அன்புச் செல்வம், முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x