Published : 29 May 2022 04:15 AM
Last Updated : 29 May 2022 04:15 AM

கொடைக்கானல் கோடை விழாவில் ஏரியில் படகு அலங்கார போட்டி: சாரல் மழையில் நனைந்தபடி கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானல்

கொடைக்கானல் ஏரியில் சுற்றுலா துறை சார்பில் நேற்று படகு அலங்கார போட்டி நடைபெற்றது.

கொடைக்கானலில் கடந்த 24-ம் தேதி தொடங்கி கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடைவிழாவை முன்னிட்டு தினமும் கலை நிகழ்ச்சிகள், சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்களுக்கான பல்வேறு போட்டி கள் நடைபெற்று வருகின்றன.

கோடைவிழாவின் ஐந்தாவது நாளான நேற்று சுற்றுலா துறை சார்பில் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடைபெற்றது. இதில் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம், வருவாய்த்துறை, தோட்டக் கலைதுறை, மீன்வளத்துறை, சுற்றுலா துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் உள்ளிட்ட அரசு துறை சார்பில் படகுகள் பங்கேற்றன.

படகுகள் அலங்கார அணி வகுப்பை சுற்றுலா உதவி அலுவலர் ஆனந்தன் முன்னிலையில் கொடைக்கானல் நகராட்சித் தலைவர் தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயகண்ணன், ஆகியோர் தொடங்கி வைத்தனர். தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட படகில் குடிநீர் திட்டம், கிராமப்புற தார்ச்சாலைகள், சமத்துவபுரம், சமுதாயக்கூடம் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தோட்டக்கலை துறை சார்பில் கொய்மலர்களால் அலங் கரிங்கப்பட்ட சிங்கம் காட்சிப் படுத்தப்பட்டது. மீன்வள துறை சார்பில் மிகப்பெரிய மீன் உருவம் இடம்பெற்றது. வருவாய் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை துறை செயல்படுத்தும் திட்டங் கள் இடம்பெற்றிருந்தன. சுற் றுலாத்துறை சார்பில் சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் தங்கும் விடுதிகளின் புகைப் படங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

படகு அலங்காரப்போட்டியில் ஊராட்சி ஒன்றியம் முதல் பரிசும், தோட்டக்கலை துறை இரண்டாம் பரிசும், மீன் வளத்துறை மூன்றாம் பரிசும் பெற்றதாக சுற்றுலாத்துறையினர் அறிவித்தனர். சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலாப் பயணிகள் படகு அலங்கார அணிவகுப்பை கண்டு ரசித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x