Published : 29 May 2022 04:15 AM
Last Updated : 29 May 2022 04:15 AM

அதிகாரிகளுக்கு பதிவு தபாலில் கோரிக்கை மனுவை அனுப்பிவிட்டு வழக்கு தொடரும் நடைமுறை அதிகரித்து வருகிறது: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை

சென்னை

அதிகாரிகளுக்கு பதிவுத் தபாலில் கோரிக்கை மனுவை அனுப்பி விட்டு, அதே வேகத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடைமுறை சமீப காலமாக அதிகரித்து வருகிறது என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் வேதனை யுடன் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் உள்ள கோயில் ஒன்றில் தங்களை அறங் காவலர்களாக நியமிக்கக்கோரி அறநிலையத்துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்க உத்தரவிடக் கோரி பச்சமுத்து உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசா ரணைக்கு வந்தது. அப்போது உரிய ஆவண, ஆதாரங்களுடன் மனு தாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு மீண்டும் முறைப்படி மனு அளிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், அறங்காவலர்கள் நிய மனத்துக்கு ஆவணங்கள் முக்கியம் என்பதால் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுதாரர்கள் மீண்டும் மனு அளிக்க வேண்டுமென அறிவுறுத்தினார். பின்னர் நீதிபதி, அதிகாரிகளுக்கு பதிவுத்தபாலில் கோரிக்கை மனுவை அனுப்பி வைத்துவிட்டு அதேவேகத்தில் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நடைமுறை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

ஊழலுக்கு சமமானது..

அந்த கோரிக்கை மனுக்களை பரிசீலிக்கும்மாறு உயர் நீதிமன்றம் உத்தரவிடும்போது அதை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு மனுதாரர்களும், அதிகாரிகளிடம் சென்று தங்களுக்கு சாதகமான உத்தரவுகளைப் பெற்று விடுகின்றனர். இதுவும் ஒரு வகையி்ல் ஊழலுக்கு சமமானது தான். அதிகாரிகளுக்கு இருக்கும் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் உத்தரவுகளை பிறப்பிக்கவி்ல்லை எனக் குற்றம் காணக்கூடாது.

அதேநேரம் உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளால், நீதிமன்ற அவமதிப்புக்கு பயந்து, கோரிக்கை மனுக்கள் மீது அவசர கதியில் உத்தரவு பிறப்பிக்கும் நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்படு வதாக வேதனை தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x