Published : 28 May 2022 06:18 AM
Last Updated : 28 May 2022 06:18 AM

தமிழகத்தின் புதுமைப் பெண்களை அடையாளம் காட்டுகிறது தனிஷ்க் - ‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து முன்னெடுப்பு

சென்னை: பாரதியின் ‘புதுமைப் பெண்’ என்கிற தத்துவத்தில் உத்வேகம் பெற்ற பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் நிறுவனம், ‘இந்து தமிழ் திசை’யோடு இணைந்து தமிழ் கலாச்சாரத்தை ஒளிரச் செய்யும் புதுமைப் பெண்களைக் கொண்டாட விரும்பி, இம்முயற்சியை முன்னெடுத்துள்ளது.

‘புதுமைப் பெண்’ தமிழ்க் கலாச்சாரத்தின் பாதுகாவலராகவும், புதுமையின் முன்னோடியாகவும் இருப்பதோடு, தங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். ‘புதுமைப் பெண் யார்’ என்பது குறித்து சில பிரபலங்களிடம் கேட்டோம். அவர்கள் கூறியவை:

கிரேஸ் பானு, திருநர் உரிமை கூட்டியக்கம், சிறந்த திருநங்கைக்கான தமிழக அரசின் விருது பெற்றவர்: இந்த பூமி அனைவருக்குமானது. இதில் வாழ ஒவ்வொரு உயிருக்கும் தகுதி உண்டு என்பதைப் புரிந்து கொள்கிறவர்கள் புதுமைப் பெண்கள். சாதிய, பாலின வேறுபாடுகள் இன்றி தொலைநோக்குப் பார்வையோடு அனைத்துத் தரப்பையும் ஏற்றுக்கொள்ளும் சிந்தனையுள்ள உழைக்கும் வர்க்கப் பெண்கள் புதுமைப் பெண்கள். சுயமாகவும் சுயமரியாதையோடும் சுய விருப்பத்தோடும் வாழ்கிறவர்கள், சக மனிதர்களை மனிதர்களாக ஏற்றுக்கொள்கிறவர்கள் புதுமைப் பெண்கள்.

வனிதாமணி, கதைசொல்லி, கதைக்களம்: தனக்கான உரிமைகளைப் பெறுவதோடு, தன்னோடு சமூகத்தையும் முன்நகர்த்திச் செல்பவர்கள் புதுமைப் பெண்கள். தன் சிந்தனைக்கு சிறகு முளைத்த பின், தன் கனவுகளுக்குக் கால் முளைத்த பின், அடுத்த தலைமுறையின் விரல்பற்றி மேலேற்றுபவர்கள் புதுமைப் பெண்கள்.

கிரிஜா குமார்பாபு, குழந்தைகள் நலச் செயற்பாட்டாளார், தமிழக அரசின் ‘அவ்வையார்‘ விருது பெற்றவர்: திமிர்ந்த ஞானச் செருக்கு கொண்டவர்களைப் புதுமைப் பெண் என்றார் பாரதி. திருவள்ளுவரோ, ‘தற்காத்து தற்கொண்டாற் பேணி‘ என்கிறார். எல்லாச் சூழ்நிலையையும் ஆராய்ந்து அதற்கேற்பத் தன்னைக் காத்துக்கொள்ளும் திறன் கொண்டவர்களே புதுமைப் பெண்கள். கற்ற கல்வியைப் பயன்படுத்தி, சிறந்த முறையில் வீட்டை நிர்வகித்துக் குழந்தைகளை நல்வழிப்படுத்துகிறவர்கள் புதுமைப் பெண்கள். நவீன ஆடைகளை அணிவதில் இல்லை புதுமை; சிந்தனையிலும் அதைச் செயல்படுத்துவதிலும் முற்போக்காக இருக்கிறவர்கள் புதுமைப் பெண்கள்.

டாக்டர். கல்யாணி நித்யானந்தன், இதயசிகிச்சை நிபுணர் (பணி நிறைவு): உடலுக்கும் மனத்துக்கும் என்ன அவமானம் விளைந்தாலும் தூக்கியெறிந்து விட்டு முன்னேறுபவரே புதுமைப் பெண். படிப்பாலும் பதவியாலும் மேன்மையடைந்த போதும் தலைக்கனம் ஏறாத தன்மானத்துடன் கூடிய மனதிடம் உள்ளவர் புதுமைப் பெண். ஆண், பெண் பாகுபாடின்றி இருபாலரையும் நட்பாக ஏற்று நடத்துபவர் புதுமைப் பெண்.

பா.ஜீவசுந்தரி, எழுத்தாளர், பெண்ணியச்செயற்பாட்டாளர்: எதற்காகவும் யாரையும் சார்ந்து இருக்காமல், தன் தேவைகளைத் தானே செய்து கொள்வதுடன், சொந்தக்காலில் நிற்பவரே புதுமைப் பெண். பெண்களுக்காகவும் பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் துணைநிற்பவர்கள் புதுமைப் பெண்கள். தன் முடிவைத் தானே எடுக்கும் சுயசிந்தனையோடு செயல்படுகிறவர்கள் புதுமைப்பெண்கள்.

‘இந்து தமிழ் திசை’ உடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த முன்னெடுப்பின் மூலம் புதுமைப் பெண்களைக் கொண்டாடுவதோடு, அவர்களைத் தங்கள் ஷோரூமுக்கு அழைத்து கவுரவிக்கவும் திட்டமிட்டுள்ளது தனிஷ்க். புதுமைப் பெண்கள் பகிர்ந்து கொள்ளும் அனுபவங்கள் தனிஷ்க் ‘புதுமைப் பெண்’ ஃபேஸ்புக் பக்கத்திலும் இடம்பெறும்.

புதுமைப் பெண்கள் தங்களது அனுபவங்களை tanishq.co.in/pudhumai-penn என்ற லிங்க்-கில் பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது அருகாமை யில் உள்ள தனிஷ்க் ஷோரூமுக்கு நேரில் வந்தும் பகிர்ந்து கொள்ளலாம்.

இத்துடன் உள்ள QR- குறியீட்டை ஸ்கேன் செய்தும், உங்களது அனுபவக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x