Published : 28 May 2022 07:41 AM
Last Updated : 28 May 2022 07:41 AM

கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் இலக்கிய அரங்கம், கவியரங்கம், கருத்தரங்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இலக்கிய அரங்கம், கவியரங்கம், நாட்டுப்புற இசையரங்கம், தெம்மாங்குத் தேனரங்கம்,கருத்தரங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று சென்னைதெற்கு மாவட்ட திமுக செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஜூன் 4-ம் தேதி மாலை 5 மணிக்கு வளசரவாக்கம் எஸ்.வி.எஸ்.நகரில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் நடக்கும்இலக்கிய அரங்கில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடக்க உரையும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலை உரையும் ஆற்றுகின்றனர்.

ஜூன் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் மண்டபத்தில் நடைபெறும் கவியரங்கத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன் உரையாற்றுகிறார். 7-ம் தேதிமாலை 5 மணிக்கு செம்மஞ்சேரியில் நடக்கும் நாட்டுப்புற இசையரங்கத்தை துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமியும், 9-ம் தேதி மாலை 5 மணிக்கு சைதாப்பேட்டை - வேளச்சேரி சாலையில் நடைபெறும் தெம்மாங்குத் தேனரங்கத்தை துணைப்பொதுச் செயலாளர் க.பொன்முடியும், 12-ம் தேதி மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் மார்க்கெட்டில் நடக்கும் கருத்தரங்கத்தை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவும் தொடங்கி வைக்கவுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x