Published : 17 May 2022 06:44 AM
Last Updated : 17 May 2022 06:44 AM

கோயில் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு

கோபுரத்தில் ஏறிய முத்து

தூத்துக்குடி: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் ராஜகோபுரத்தில் ஏறிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் 137 அடி உயர ராஜகோபுரம் உள்ளது. இது 9 நிலைகளைக் கொண்டது. ராஜகோபுரத்தின் மீது 9 கலசங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ராஜகோபுரத்தின் கலசங்கள் அருகே ஒருவர் ஏறி நிற்பதை பக்தர்கள் பார்த்துள்ளனர்.

திருச்செந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தீயணைப்பு மற்றும்மீட்புப் படையினர் அங்கு வந்துராஜகோபுரத்தின் உட்பகுதி படிகள் வழியாக ஏறி மேல் பகுதிக்கு சென்றனர். அங்கு கலசங்கள் அருகே அமர்ந்திருந்த நபரிடம் பேசி அவரை பத்திரமாக கீழே அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர் சிவகங்கை மாவட்டம் கச்சாத்தநல்லூர் முருகேசன் மகன் முத்து (24) எனதெரியவந்தது. அவர் கூறும்போது, “நான் பட்டப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சிற்ப வேலைக்கு செல்கிறேன். திருச்செந்தூர் ராஜகோபுரத்தில் உள்ள சிற்பங்கள் வர்ணம் மற்றும் பாலீஷ் செய்யாமல் இருப்பதால், அதனை பார்ப்பதற்காக மேலே ஏறிச் சென்றேன்” என தெரிவித்தார். போலீஸார் அவரை எச்சரித்து அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x