பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற 7-ம் வகுப்பு மாணவர் மாயம்

பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற 7-ம் வகுப்பு மாணவர் மாயம்
Updated on: 
1 min read

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் சஞ்சய் (12) ஊத்தங்கரை அருகே உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் சென்ற சஞ்சய், மாலையில் வீடு திரும்பியுள்ளார். பின்னர், டியூஷனுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதல்கட்டமாக, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சஞ்சய் அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளிடம் லிப்ட் கேட்பதும், பின்னர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் செல்வதும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து, போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். லிப்ட் கேட்டு சென்ற சஞ்சயை யாரேனும் கடத்திச் சென்றனரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற 7-ம் வகுப்பு மாணவர் மாயம்
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in