Published : 01 May 2016 12:59 PM
Last Updated : 01 May 2016 12:59 PM

‘தி இந்து’, தேர்தல் ஆணையம் இணைந்து நடத்திய வாக்காளர் வாய்ஸ் நிகழ்ச்சி: இன்று மாலை பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

‘தி இந்து’ மற்றும் தேர்தல் ஆணை யம் இணைந்து சென்னையில் நடத்திய கல்லூரி மாணவர்களுக் கான வாக்காளர் வாய்ஸ் நிகழ்ச்சி யின் தொகுப்பு, இன்று (ஞாயிற் றுக்கிழமை) மாலை 6 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர் தல் மே 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முதல்முறையாக வாக்களிக்கவுள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு, வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்க ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற மாணவர் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தது. அவ்விழாக்கள், குடியாத்தம், மதுரை, கோவை, திருநெல்வேலி, சென்னை, நாகப்பட்டினம், ஈரோடு, சிதம்பரம் ஆகிய ஊர்களில் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிகளில் முதல் தலை முறை வாக்காளர் விழிப்புணர்வுக் காக ‘தி இந்து’ உருவாக்கிய, பாடலாசிரியர் அண்ணாமலை எழுதி, இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையமைத்த பாடல் ஒலிபரப் பப்பட்டது. ஒவ்வொரு நிகழ்ச்சி யிலும் அந்தந்த மாவட்ட தேர்தல் உயர் அலுவலர்கள் பங்கேற்று தொடங்கிவைத்தனர். ஒவ்வொரு ஊரிலும் சுமார் 1,500 மாணவர்கள் கலந்துகொண்டு, தேர்தலில் வாக்கு களை யாருக்கும் விற்காமல், சுயமாக சிந்தித்து வாக்களிப்போம் என்று உறுதியேற்றனர்.

நிகழ்ச்சி அரங்கில் மாதிரி வாக் குச் சாவடிகளும் அமைக்கப்பட்டன. இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு கள் குறித்து ‘தி இந்து’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் விளக்கவுரையாற் றினார். அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்று வாக்களிப்பதன் அவசியம் குறித்து மாணவர்களிடம் விளக்கிப் பேசினர். தேர்தல் தொடர்பான மாணவர் களின் விழிப்புணர்வு நாடகங்களும் நடைபெற்றன இந்த நிகழ்ச்சிகளை தூர்தர்ஷனின் பொதிகை தொலைக் காட்சி பதிவு செய்துள்ளது.

நாகப்பட்டினத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளை என்.எஸ்.அருண் மொழி தயாரித்து வழங்கினார். அது ‘வாக்காளர் வாய்ஸ்’ என்ற தலைப்பில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

அதேபோல் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியை பி.சம்பத் தயாரித்துள்ளார். அந்த நிகழ்ச்சித் தொகுப்பு இன்று (மே 1) மாலை 6 முதல் 6.30 மணி வரை பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச் சியை என்.எஸ்.அருண்மொழி தயாரித்துள்ளார். அந்த நிகழ்ச்சி தொகுப்பு, வரும் மே 8-ம் தேதி மாலை 6 முதல் 6.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

தேர்தல் குறித்து விழிப்புணர்வை உருவாக்கும் இந்த நல்ல நோக் கத்துக்காக தூர்தர்ஷனும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x