Published : 14 May 2016 12:38 PM
Last Updated : 14 May 2016 12:38 PM

உண்ணாவிரதம் இருந்து வரும் சுயேட்சை வேட்பாளர் மயக்கம்: திருப்பூரில் பரபரப்பு

சட்டப்பேரவைத் தேர்தல் முடியும்வரை மதுக்கடைகளை மூடக் கோரி, திருப்பூரில் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் சுயேட்சை வேட்பாளர் நேற்று மயக்கமடைந்தார்.

திருப்பூர் வடக்கு தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக பிரபாகரன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர், தேர்தல் முடியும்வரை மதுக்கடைகளை மூட வேண்டும், ஒரு தொகுதியில் ரூ.28 லட்சத்துக்கு மேல் செலவு செய்யும் வேட்பாளர்களை கண்டறிந்து, தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கடந்த 4-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

வேட்பாளரின் தேர்தல் வரவு - செலவு கணக்குகளை சமர்ப்பிக்க, திருப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று பிரபாகரன் சென்றுள்ளார். வெளியே வந்து அமர்ந்தவர், அப்படியே மயங்கினாராம். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x