Published : 03 May 2016 09:44 AM
Last Updated : 03 May 2016 09:44 AM

அமைச்சர் பழனியப்பன் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு: பாறை, மரங்களை போட்டு பாதை மறிப்பு - செருப்பு, கல்வீச்சால் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே பிரச்சாரத்துக்கு சென்ற அமைச்சர் பழனியப்பனை கிராமத்துக்குள் நுழைய விடாமல் தடுத்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டம் கடத்தூர் அருகே உள்ளது நத்தமேடு கிராமம். நேற்று முன்தினம் அங்கு அமைச்சர் பழனியப்பன் வாக்கு சேகரிக்க திட்டமிட்டிருந்தார். அவர் வருகைக்கு முன்பாக கட்சியினர் நத்தமேடு கிராமத்தில் கொடி, தோரணங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நத்த மேடு கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கும் கொடி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அதிமுக-வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

‘கடந்த 5 ஆண்டுகள் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த போது நத்தமேடு பகுதிக்கு பழனியப்பன் எந்த வசதிகளையும் செய்து தரவில்லை. அதனால் அவர் வாக்கு கேட்டு ஊருக்குள் வரக்கூடாது’ என்று எதிர்ப்பு தெரி வித்தனர். மேலும், கிராமத்துக்கு செல்லும் பாதையில் பாறாங்கற் களையும் மரங்களை வெட்டிப் போட்டும் தடை ஏற்படுத்தினர்.

இதற்கிடையில் அப்பகுதிக்கு பழனியப்பன் வாக்கு சேகரிக்க வந்தார். கட்சித் தொண்டர்கள் உதவியுடன் சாலையில் இருந்த தடைகளை நீக்கி அவர் கிராமத் துக்குள் சென்றார். அப்போது கிராம மக்கள் சிலர் திரண்டு வந்து அவர் பிரச்சாரம் செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் செருப்பு, கல் உள்ளிட்டவற்றை வீசி தகராறில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தின்போது பழனியப்பனுடன் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒருவரின் கார் கண்ணாடி உடைந்தது. இதனால் பழனியப்பன் தனது ஆதர வாளர்களுடன் அங்கிருந்து புறப் பட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் பழனியப்பனின் கார் ஓட்டுநர் சக்திவேல் கடத்தூர் போலீஸில் அளித்த புகாரில், பாமக-வினர் 20 பேர் உள்ளிட்ட குழுவினர் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.

இந்த சம்பவம் குறித்து நத்த மேடு கிராம மக்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘நத்தமேடு உள் ளிட்ட பகுதிகள் பாமகவுக்கு செல் வாக்கு மிக்கவை என்பதால் கடந்த 5 ஆண்டுகளில் அமைச்சர் பழனியப்பன் எங்கள் கிராமங்களை புறக்கணித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கிராம மக்கள் எதிர்ப்பு காட்டியுள்ளனர்’ என்றனர்.

பழனியப்பன் தரப்பில் விசாரித்தபோது, ‘தொகுதி முழுக்க பரவலாக தன்னால் செய்ய முடிந்த நலத் திட்டங்களை அமைச்சர் செய்து முடித்துள்ளார். நத்தமேடு கிராமத்தில் நடந்த சம்பவம் பாமக-வைச் சேர்ந்த சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது’என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x