Published : 28 Apr 2022 03:45 PM
Last Updated : 28 Apr 2022 03:45 PM

சென்னையில் போக்குவரத்து காவல்துறை சிறப்பு வாகன தணிக்கை: ஒரே நாளில் 1,595 வழக்குகள் பதிவு

கோப்புப் படம்

சென்னை: சென்னையில் நேற்று (ஏப்.27) போக்குவரத்து காவல்துறை நடத்திய சிறப்பு வாகனத் தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 1595 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்ப்பில், "சென்னை பெருநகரில் போக்குவரத்து விதிகளை அமல்படுத்தும் வகையில், போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், விபத்துகளை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் தவறான வழியில் வாகனங்களை ஓட்டுவது, அதிக வேகமாக வாகனம் ஓட்டி மற்ற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து விளைவிப்பது மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பது போன்ற போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த நேற்று (ஏப்.27) சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினரால் சிறப்பு வாகன தணிக்கை நடத்தப்பட்டது.

இந்தத் தணிக்கையில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக 1,595 வழக்குகளும், வேகமாக வாகனம் ஓட்டியதற்காக 96 வழக்குகளும், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதற்காக 403 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போக்குவரத்து வடக்கு மாவட்டத்தில் தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 674 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 101 வழக்குகள், வேகமாக வானம் ஓட்டியதாக 14 வழக்குகள் என மொத்தம் 789 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தெற்கு மாவட்டத்தில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 407 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 165 வழக்குகள், வேகமாக வானம் ஓட்டியதாக 46 வழக்குகள் என மொத்தம் 618 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல், கிழக்கு மாவட்டத்தில், தவறான வழியில் வாகனம் ஓட்டியதாக 514 வழக்குகள், அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 137 வழக்குகள், வேகமாக வானம் ஓட்டியதாக 36 வழக்குகள் என மொத்தம் 687 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு தணிக்கையை தொடர்ந்து நடத்தப்படும், அனைத்து வாகன ஓட்டிகளும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x