Last Updated : 24 Apr, 2022 04:15 AM

 

Published : 24 Apr 2022 04:15 AM
Last Updated : 24 Apr 2022 04:15 AM

ஹைவேவிஸ் வனப்பகுதியில் யானை நடமாட்டம்: ஆசிரியர் பாதுகாப்புடன் வீடு திரும்பும் மாணவர்கள்

இங்கர்சால்

சின்னமனூர்

ஹைவேவிஸ் மலை கிராமங்களில் யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மாணவர் களின் பாதுகாப்புக்காக ஆசிரியர்கள் உடன் சென்று வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மேக மலை. 18 கொண்டை ஊசி வளைவு களுடன் அமைந்துள்ள இப்பகுதி யில் ஹைவேவிஸ், மணலாறு, மகாராஜமெட்டு, மேல்மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு உள் ளிட்ட மலை கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி ஹைவேவிஸ் பேரூராட்சியில் அமைந்துள்ளது. 1967-ல் உயர் நிலையாக இருந்த இப்பள்ளி 2013-ல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பெரும்பாலும் தோட்டத் தொழி லாளர்களின் குழந்தைகளே இங்கு கல்வி பயின்று வருகின்றனர்.

சுற்றியுள்ள கிராமங்களுக்கான ஒரே அரசு மேல்நிலைப் பள்ளி என்பதால் 550 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். ஆனால் மணலாறு, மேல்மணலாறு, மகாராஜாமெட்டு, இரவங்கலாறு உள்ளிட்ட கிரா மங்களுக்கு பேருந்து வசதி படிப்படியாக குறைந்தது. இதனால் பல மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு வரத் தொடங்கினர். இப்பகுதி முழுவதும் தேயிலைத் தோட்டங்கள் நிறைந்துள்ளன. யானை, காட்டு மாடு, காட்டுப் பன்றி போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அவ்வப்போது இருக்கும். மேலும் மலைப்பகுதி என்பதால் திடீரென்று பெய்யும் மழை, மேகமூட்டம் போன்ற காரணங்களால் விரைவில் இருள் சூழ்ந்து விடும். இதனால் இடைநிற்றல் அதிகரித்து பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 62 ஆகக் குறைந்தது. மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தவும், நடந்து வரும் மாணவர்களின் பாதுகாப்புக்காகவும் அவர்களை காலையிலும், மாலையிலும் வீடு வரை ஆசிரியர்கள் தினமும் அழைத்துச் சென்று வருகின்றனர்.

ஆசிரியர்களைப் பொறுத்தரை பெரும்பாலும் சின்னமனூரில் இருந்து வருவதால் ஒப்பந்த முறை யில் வாகனத்தை ஏற்பாடு செய்து வந்து செல்கின்றனர். எனவே மாணவர்களின் சிரமம் மற்றும் பாதுகாப்பு கருதி காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மரியதாஸ் என்பவர் கூறுகையில், எனது பேரன் இப்பள்ளியில் படிக்கிறார். இங்கு படிப்பவர்கள் எல்லோருமே தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள்தான். மலைப்பகுதி என்பதால் விலங்குகள், மழை, இருள் போன்றவற்றுக்குப் பயந்து பல மாணவர்கள் பள்ளிக்கு நடந்து வர முடியாத நிலை உள்ளது. எனவே பலரும் வெளியூர்களுக்குச் சென்று விடுதியில் பயில்கின்றனர் என்றார்.

பேரூராட்சித் தலைவர் இங்கர்சால் கூறுகையில், மாணவிகள் பல கி.மீ. தூரம் வனப் பகுதியில் நடந்து வருவது பல்வேறு வகையிலும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே இப்பள்ளிக்கு விடுதி வசதி மிக முக்கியம். இதற்காக அரசு இடம் இப்பகுதியில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளைச் செய் தால் தொழிலாளர்களின் குழந்தை களுக்கு கல்வி முழுமையாகச் சென்றடையும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x