Published : 21 Apr 2022 12:31 PM
Last Updated : 21 Apr 2022 12:31 PM

'காலநிலை மாற்ற பாதிப்புகளைத் தடுக்கும் திட்டங்கள் மத்திய அரசிடம் இல்லை' - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

நிகழ்வில் பேசிய கனிமொழி

சென்னை: காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தடுப்பற்கான தொலைநோக்குத் திட்டங்கள் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடனான கலந்துரையாடல் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை நடைபெற்றது. பூவுலகின் நண்பர்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன், வேல்முருகன், ஜவாஹிருல்லா, சிந்தனைச்செல்வன், பாலாஜி, டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்று பேசியதாவது,

எம்.பி. கனிமொழி: "மத்திய அரசிடம் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைத் தடுப்பற்கான தொலைநோக்குத் திட்டங்கள் இல்லை. இந்தியாவிற்கே இதில் முன்னோடியாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது."

காலநிலை துறை அமைச்சர் அமைச்சர் மெய்யானந்தன்: "காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படுவது விளிம்புநிலை மக்கள்தான். கஜா புயலின்போது அந்த பாதிப்புகளை நான் நேரில் உணர்ந்தேன். காலநிலை மாற்ற நடவடிக்கைகளில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுவோம்.”

திமுக எம்.எல்.ஏ டிஆர்பி.ராஜா: "எந்தத் திட்டங்களைக் கொண்டு வந்தாலும் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டே முன்னெடுத்து வரும் அரசாக திமுக விளங்குகிறது. போக்குவரத்து, உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி என எல்லாத் துறைகளிலும் காலநிலைக்கு இசைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.”

திட்டக்குழுத் தலைவர் ஜெயரஞ்சன்: ``காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை முன்வைப்பவர்கள் அனைவரும் உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு தகவமைப்புத் திட்டங்களை வகுப்பது அவசியம்”

இவ்வாறாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x