Published : 15 Apr 2022 12:40 PM
Last Updated : 15 Apr 2022 12:40 PM

'வட இந்தியாவில் இரவு 10 மணிக்கு மேல் சுற்றுங்கள்' - பெண்ணிடம் மோசமாக நடந்து கொண்ட காவல் அதிகாரி: விசாரணைக்கு  டிஜிபி உத்தரவு

சென்னை: வட இந்தியாவிற்கு போய் இரவு 10 மணிக்கு மேல் வெளியே சுற்றுங்கள் என்று கூறி பெண்ணிடம் மிகவும் மோசமாக காவல் துறை அதிகாரி நடந்து கொண்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

மதுமிதா பைத்யா என்பவர் நேற்று இரவு இசிஆர் சாலையில் சி ஷெல் அவின்யூ என்ற இடத்தில் கடற்கரையில் நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த காவல் துறை அதிகாரி ஒருவர் மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார். குறிப்பாக வட இந்தியாவிற்கு போய் இரவு 10 மணிக்கு மேல் வெளியில் சுற்றுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

— Madhumita Baidya (@madhumitabaidya) April 14, 2022

அப்போது மதுமிதா அந்த காவல் துறை அதிகாரிக்கு பதில் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த காவல் அதிகாரி இவர்களை காவல்துறை வாகனத்தில் ஏறச் சொல்லி மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள மதுமிதா, "நான் குற்றவாளி அல்ல, நல்ல முறையில் நடந்து கொள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளியுங்கள்" என்று பதிவு செய்துள்ளார்.

— Madhumita Baidya (@madhumitabaidya) April 14, 2022

இந்த பதிவு குறிப்பிட்டு ட்விட்டரில் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இதற்கு தமிழக காவல் துறையின் அதிகார பூர்வ ட்விட்டர் பக்கத்தில் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பணியில் இருந்த காவல் அதிகாரியின் பொறுப்பற்ற நடத்தைக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறோம். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x