Published : 08 Apr 2022 06:04 AM
Last Updated : 08 Apr 2022 06:04 AM

விழுப்புரத்தில் அதிமுகவினர் உண்ணாவிரதம்: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைதாகி விடுவிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் சொத்து வரி உயர்வை திரும்ப பெறக்கோரி திமுக அரசை கண்டித்து, அதிமுகவினர் உண்ணாவிரத போராட் டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம், மடிகணினி, அம்மா மினி கிளினிக் போன்ற திட்டங்களை திமுக அரசு முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சொத்து வரி உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும், விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் வளர்மதி, எம் எல் ஏக்கள் வானூர் சக்கரபாணி, திண்டிவனம் அர்ஜூணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனு மதி வழங்கப்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தாக அதிமுகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் மாலை விடுவிக் கப்பட்டனர்.

முன்னதாக சிவி. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது: பெண்கள் அதிமுகவின் வாக்கு வங்கி என்பதால் தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட்ட ஸ்கூட்டி திட்டத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளது. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக பேசப்பட்ட தமிழக காவல்துறை இன்று கேலியும் , கிண்டலாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது. இது மிகவும்வருத்தமாக உள்ளது. வழிநடத்தும் முதல்வர் திறமையற்றவர்.

இதனால் தான் தமிழக காவல்துறை சிரிப்பு போலீஸாக மாறியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புசுமார் 42 கோடி நலத்திட்ட உதவிகளையும், புதிய கட்டிடங்களை முதல்வர் திறந்துவைத்தார். இதற்கான நிதியை திமுக அரசுஒதுக்கியதா? அத்தனை திட்டங் களுக்கும் நிதி ஒதுக்கியது அதிமுகஅரசுதான் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x