Published : 07 Apr 2016 08:17 AM
Last Updated : 07 Apr 2016 08:17 AM

ராமநாதபுரம் அருகே கூட்டுறவு வங்கியில் பெண் செயலரை கட்டிப்போட்டு 415 பவுன் நகை கொள்ளை

ராமநாதபுரம் அருகே தொரு வளூர் கிராமத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு கஸ்தூரி(40) செயலராக பணி யாற்றி வருகிறார். இந்த வங்கியில் இவர் மட்டும் பணியாற்றி வருகிறார்.

நேற்று பகல் 2.30 மணி யளவில் 2 மர்ம நபர்கள் ஹெல் மெட் அணிந்தவாறு நகைக் கடன் பெறுவதுபோல் வங்கிக் குள் வந்துள்ளனர். திடீரென செயலர் கஸ்தூரியை தாக்கி, வாய், கை, கால்களை கட்டி அங்குள்ள அறையில் போட் டுள்ளனர். பின்னர் லாக்கரை திறந்து அதிலிருந்த 415 பவுன் நகைகளை கொள்ளை யடித்துச் சென்றனர். மாலை 5.30 மணியளவில் கஸ்தூரி அந்த அறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக புரண்டு வந்து காலால் வங்கியின் கதவை தட்டியுள்ளார். அப் போது அந்த வழியாகச் சென்ற பெண் சத்தம்கேட்டு வங்கிக்கு சென்றார். அங்கு கஸ்தூரியின் நிலையை பார்த்து காப்பாற்றி உள்ளார். அதன்பின் போலீ ஸுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண் காணிப்பாளர் என்.மணிவண் ணன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் கூறியது: நகைக்கடன் மூலம் பெறப்பட்ட 425 பவுன் நகைகள் லாக்கரில் இருந்துள்ளன. இதில் ஒரு பாக்கெட்டில் உள்ள சுமார் 10 பவுன் நகைகள் தப்பின. மீதி 415 பவுன் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளன. தனிப் படை அமைத்து கொள்ளை யர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x