Published : 01 Apr 2022 06:37 AM
Last Updated : 01 Apr 2022 06:37 AM

சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும்: டிஜிபி சைலேந்திரபாபு

சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜுக்கு கேடயம் வழங்கிறார் டிஜிபி சைலேந்திரபாபு.

விழுப்புரம்: சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, காவல்துறையினர் விழிப்புடன் செயல்படவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகியமாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நேற்றுநடைபெற்றது. இக்கூட்டத்தில் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு, காவல்துறை - பொதுமக்கள் நல்லுறவு போன்றவற்றில் திறம்பட செயல்பட்ட காவல்துறையினருக்கு, பாராட்டு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் பேசியது:

22 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் சரகத்தில் பணியாற்றி இருக்கிறேன்.அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெற்றன. அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின் கடந்த 10 ஆண்டுகளில், வடமாவட்டங்களில் பெரிய அளவிலான சாதிய மோதல் சம்பவங்கள் நடைபெறவில்லை.இருப்பினும், காவல் துறையினர் போதிய விழிப்புடனும், துரிதமாகவும் செயல்பட வேண்டும்.சாதிய மோதல் ஏற்பட்டால், அதனை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அது பெரிதாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.தொடர்ந்துசெய்தியாளர்களிடம்

டிஜிபி சைலேந்திரபாபு பேசியது:

தமிழகத்தில் ரவுடிகள், போதை பொருள் விற்பவர்கள், பாலியல் குற்றத்தில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. காவல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் வாகனங்களை ஏலம் விட்டவகையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தலா ரூ. 1 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடலூரில் நடைபெற்ற பாலியல் சம்பவத்தை காவல்துறையே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x