Published : 06 Apr 2016 10:02 AM
Last Updated : 06 Apr 2016 10:02 AM

சுற்றுச்சூழல் அனுமதியின்றி 302 மருத்துவமனைகள்: பசுமை தீர்ப்பாயத்தில் விவரங்கள் தாக்கல்

அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் மருத்துவ திரவ கழிவுகளை சுத்திகரிக்க வசதிகள் இல்லை. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர்லால் சண்முகம் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இதுபற்றிய விசாரணையின்போது சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் மருத்துவமனைகள் செயல்படு வதாக மனுதாரரின் வழக்கறிஞர் வேல்முருகன் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.ஜோதிமணி, உறுப்பினர் பி.எஸ்.ராவ் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் ஆகிய மாவட்டங்களில் சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் இயங்கிய 302 மருத்துவமனைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு மாசுக்கட் டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் யாஸ்மீன் அலி தாக்கல் செய்தார்.

அதில், “சென்னையில் செயல் படும் பிரபல மருத்துவமனைகள் உட்பட பல மருத்துவமனைகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச் சூழல் அனுமதி இல்லாமல் இயங் கின” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதிகள் திரவ கழிவுகள் கையாளுவது குறித்து சமீபத்தில் தமிழக அரசு அர சாணை வெளியிட்டுள்ளது.அந்த ஆணையை அனைத்து மருத்துவமனைகளும் பின்பற்ற வேண்டும். மனுதாரர் கொடுத்துள்ள ஆலோசனையை படித்து இந்திய மருத்துவர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x