Published : 14 Apr 2016 08:57 AM
Last Updated : 14 Apr 2016 08:57 AM

ராணுவ பயிற்சி கல்லூரி பட்டமளிப்பு: விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் ராணுவக் கல்லூரி உள்ளது. இங்கு ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை அதிகாரி களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் காமன்வெல்த் நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியின் 71-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நாளை (15-ம் தேதி) பிற்பகல் 3 மணியள வில் நடைபெறுகிறது. விழாவில், குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி சிறப்பு விருந்தி னராக பங்கேற்று பட்டம் வழங்குகிறார். 25 நட்பு நாடுகளைச் சேர்ந்த 34 அதிகாரிகள் உட்பட மொத்தம் 458 பேருக்கு அவர் பட்டங் களையும், பதக்கங்களையும் வழங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x