Published : 13 Apr 2016 08:23 AM
Last Updated : 13 Apr 2016 08:23 AM

போக்குவரத்து ஆணையர் ஆட்டோவில் பயணம் செய்தால்தான் மக்கள் கஷ்டம் தெரியும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்

தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இதுவரை எந்த உத்தரவுகளையும் அமல்படுத்தாத அதிகாரிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமை யாக சாடினர். அத்துடன் போக்கு வரத்து ஆணையர் ஆட்டோவில் பயணம் செய்தால்தான் பொது மக்கள் படும்பாடு புரியும் என நீதி பதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஆட்டோ கட்டணத்தை முறை யாக அமல்படுத்தாதது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்குகள் தொடரப் பட்டன. இந்த வழக்குகளின் விசா ரணை தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.சத்தியநாராய ணன் முன்பு விசாரணைக்கு வந் தது. தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அரசின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘‘ஆட்டோ கட்ட ணத்தை முறையாக அமல்படுத்தக் கோரி பலமுறை உத்தர விட்டும் ஏன் அந்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை? நிர்ணயிக் கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ டிரைவர்கள் வசூலிப்பதில்லை. இஷ்டத்துக்கு கட்டணம் வசூ லிக்கின்றனர்.

சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் பலர், ஆட்டோக்களுக்கு உரிமை யாளர்களாக உள்ளனர். இதனால்தான் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படுவ தில்லை. அண்டை மாநிலங்களில், ஆட்டோவில் ஏறி உட்கார்ந்ததும், மீட்டரை போட்டுவிடுகின்றனர். மீட்டர் காட்டும் கட்டணத்தைத்தான் வசூலிக்கின்றனர். ஆனால், தமிழகத்தில்தான் எந்த விதி முறைகளையும் யாரும் பின் பற்றுவதில்லை.

தமிழக போக்குவரத்துத்துறை ஆணையரை தனது அலுவல கத்தில் உட்கார்ந்திருக்காமல், ஆட்டோவில் ஏறி பயணம் செய்ய சொல்லுங்கள். அப்போதுதான், பொதுமக்கள் படும்பாடு அவருக்குத் தெரியும். எனவே பெட்ரோல், டீசல் விலைக்கேற்ப தமிழகம் முழுவதும் ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து முறையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x