Published : 23 Apr 2016 12:17 PM
Last Updated : 23 Apr 2016 12:17 PM

புதுச்சேரிக்கு 9 திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் திமுக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்களைக் கொண்ட பட்டியலை திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை வெளியிட்டது.

வரும் சட்டப் பேரவை தேர்தலில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் திமுக 9 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 21 இடங்களில் போட்டியிடுவதென தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் திமுக போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தது.

9 வேட்பாளர்கள் பட்டியல்:

1.முத்தியால்பேட்டை - எஸ்.பி.சிவக்குமார்

2.மண்ணாடிப்பட்டு - ஏ.கிருஷ்ணன் (எ) குமார்

3.தட்டாஞ்சாவடி - என்.கலியபெருமாள்

4.உருளையன்பேட்டை - இரா.சிவா

5.உப்பளம் - வி.அனிபால் கென்னடி

6.மங்களம் - சண்.குமரவேல்

7.முதலியார் பேட்டை - எஸ்.சுரேஷ்

8.காரைக்கால் (தெற்கு) -ஏ.எம்.எச்.நாஜிம்

9.நிரவி- திரு- பட்டினம் - ஏ.கீதா ஆனந்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x