Published : 17 Apr 2016 10:42 AM
Last Updated : 17 Apr 2016 10:42 AM

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வைகோ உற்சாகம்

இந்தத் தேர்தலில் தேமுதிக ம.ந.கூட்டணி தமாகா அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நம்பிக்கையுடன் கூறினார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தனது தேர்தல் பிரச் சாரத்தை சென்னை அண்ணா நகர் எம்ஜிஆர் காலனியில் நேற்று காலை தொடங்கினார். அப்போது, 29 தொகுதிகளுக்கான மதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வைகோ அறிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழின் முதல் எழுத்து ‘அ’. நாங்கள் அண்ணாவின் வழியில் செல்கிறோம். எனவே ‘அ’ என்ற முதல் எழுத்துடன் அண்ணாவின் பெயரை தாங்கி நிற்கும் அண்ணா நகரில் எனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளேன். இந்தத் தேர்தலில் தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணி வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும். கலிங்கப்பட்டியில் மதுவுக்கு எதிராக போராடியபோது, காவல்துறை என்னை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. அதற்கு காவல்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர்தான் காரணம். அப்படி இருக்கும்போது, அதிமுகவுக்கு நான் சாதகம் செய்கிறேன் என்று பேஸ்புக், வாட்ஸ் அப்-பில் பேசுகின்றனர். இதை நான் கண்டுகொள்ளப் போவதில்லை.

அதிமுகவினர் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்க உள்ள தாக கேள்விப்பட்டேன். இன் னொரு புறம் எப்படி பணம் கொடுக்கலாம் என்று திமுக யோசிக்கிறது. லோக் ஆயுக்தா என்றால் என்னெவென்றே தெரி யாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். இந்தத் தேர்தல் ஜனநாயகத் துக்கும் பண நாயகத்துக்கும் இடையேயான தேர்தல். இதில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறு வோம். இந்த முறை கோவில் பட்டி தொகுதியில் போட்டியிட உள்ளேன். தேர்தலில் நான் தோல்வியுற்றபோது, என்னுடன் இருந்த எனது தாயார், இப்போது வெற்றி பெறப் போகும்போது என்னுடன் இல்லை. இவ்வாறு வைகோ பேசினார். தொடர்ந்து வில்லிவாக்கம், கொளத்தூர், ஆர்.கே.நகர், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளிலும் தேமுதிக - ம.ந.கூட்டணி தமாகா அணிக்கு ஆதரவாக வைகோ பிரச்சாரம் செய்தார்.

வைகோ பிரச்சார பயணம்

வைகோ இன்று ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, திருமங்கலம், மதுரை மேற்கு, திருப்பரங்குன் றம், மதுரை தெற்கு தொகுதி களில் பிரச்சாரம் மேற்கொள்கி றார். 19-ம் தேதி விளவன்கோடு, கிள்ளியூர், குளச்சல், பத்மநாப புரம், நாகர்கோவில், கன்னியா குமரி சட்டமன்றத் தொகுதிகளில் நாளையும், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடைய நல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, பாளையங் கோட்டை ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.

20-ம் தேதி விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், வைகுண் டம், திருச்செந்தூர் தூத்துக் குடி, 21-ல் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், 22-ம் தேதி சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, அறந்தாங்கி, ஆலங் குடியில் பிரச்சாரம் செய்கிறார்.

23-ல் ஜெயங்கொண்டம், அரியலூர், லால்குடி, மண்ணச்ச நல்லூர், திருச்சி கிழக்கு, 24-ல் அரவக்குறிச்சி, தாராபுரம், பல்லடம், கிணத்துக்கடவு, 25-ல் கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், சூலூர், அவினாசி, பெருந்துறை, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, 26-ல் உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், மயிலம், திண்டிவனம், செஞ்சி ஆகிய தொகுதிகளில் வைகோ பிரச்சாரம் செய்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x