Published : 22 Feb 2022 05:29 PM
Last Updated : 22 Feb 2022 05:29 PM

பேரூராட்சியில் திமுக, அதிமுக, பாஜக-வின் வெற்றி சதவீதம் என்ன? - ஒரு விரைவுப் பார்வை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பேரூராட்சி வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், கட்சிவாரியாக திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆகியவை முதல் நான்கு இடங்களில் உள்ளன.

மொத்தம் 7,621 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், 196 பேர் ஏற்கெனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு விட்டனர். ஒரு இடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் 12 இடங்களில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 4 இடங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 7 மணி வரை 7603 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், 4388 திமுக வேட்பாளர்களும், 1206 அதிமுக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 368 பேரும், பாஜகவைச் சேர்ந்த 230 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 26 பேரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 101 பேரும் வெற்றி பெற்றுள்ளனர். இதுதவிர தேமுதிகவைச் சேர்ந்த 23 வேட்பாளர்களும், பகுஜன் சமாஜ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, திமுக வென்ற பேரூராட்சி வார்டுகளின் 57.58 சதவீதமும், அதிமுக 15.82 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் - 4.83%, பாஜக 3.02 சதவீதமும் ஆக உள்ளன. சிபிஐ (எம்) - 1.33%, சிபிஐ - 0.34% மற்றும் தேமுதிக - 0.30% ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x