Published : 10 Apr 2016 10:56 AM
Last Updated : 10 Apr 2016 10:56 AM

தமிழக அரசுக்கு ஒரே மாதத்தில் 6 நோட்டீஸ் - மனித உரிமை ஆணையம் அனுப்பியது

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 சம்பவங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நாட்டில் மனித உரிமை மீறல்கள் நடைபெறும் போது தேசிய மனித உரிமை ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நேரடியாக புகார்கள் மற்றும் ஊடகங்களில் வரும் செய்திகளின் அடிப்படையிலும் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி (நேற்று முன்தினம்) வரை ஒரு மாதத்தில் நாடு முழுவதும் நடைபெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு 21 நோட்டீஸ்களை ஆணையம் அனுப்பியுள்ளது. இவற்றில் தமிழகத்திற்கு மட்டும் ஒரு மாதத்தில் 6 நோட்டீஸ்களை ஆணையம் அனுப்பியிருக்கிறது.

கொத்தடிமைகள் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் போந்தவாக்கம் பகுதியில் கொத்தடிமைகளாக இருந்த ஒடிசா, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 550 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட நிவா ரண உதவிகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு தொழி லாளர் நலத்துறை செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடந்த மாதம் 8-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

விவசாயி மீது தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம் சோழ கன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன். தனியார் வங்கி யில் கடன் பெற்று டிராக்டர் வாங்கி, மாதத் தவணை கட்டாததால் அவரை காவல்துறையினர் சரமாரி யாக தாக்கினர். அவரிடம் இருந்து டிராக்டரும் பறிமுதல் செய்யப் பட்டது. விவசாயி பாலன் தாக்கப் பட்டது பற்றி விளக்கம் அளிக்கு மாறு தமிழக தலைமைச் செய லாளர், காவல்துறை தலைவருக்கு ஆணையம் கடந்த மாதம் 10-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இளைஞர் கொலை

திருப்பூர் மாவட்டம் உடு மலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் - கவுசல்யாவை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் உயிரிழந்தார். கவுசல்யா சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவருக்கு ஆணையம் கடந்த மாதம் 14-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

விவசாயி தற்கொலை

அரியலூர் மாவட்டம் ஒரத்தூரை சேர்ந்த இளம் விவசாயி அழகர். அவரிடமிருந்து கடனை வசூலிக்க தனியார் நிதி நிறுவனம் காவல்துறையினரின் துணையுடன் அவரை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. அவமானம் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக தலைமைச் செயலாளருக்கு ஆணையம் கடந்த மாதம் 14-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

குழந்தைகள் காணவில்லை

தமிழகத்தில் குழந்தைகள் காணாமல் போவது அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்களில் 271 குழந்தைகள் காணாமல் போயுள்ளன. குழந்தைகள் காணாமல் போவது தொடர்பாக விளக்கம் அளிக்கு மாறு தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை தலைவருக்கு ஆணையம் கடந்த மாதம் 30-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

பொதுமக்கள் பாதுகாப்பு

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் புலிகள் தாக்கி 6 பேரும், யானைகள் தாக்கி 20 பேரும் இறந்துள்ளனர். பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக வனத் துறை மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு ஆணை யம் கடந்த 7-ம் தேதி தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது குறிப் பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x