Last Updated : 12 Apr, 2016 08:12 AM

 

Published : 12 Apr 2016 08:12 AM
Last Updated : 12 Apr 2016 08:12 AM

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி சார்பில் அரசியல் விழிப்புணர்வு வீதி நாடகங்கள்: அரங்கேற்ற தயாராகும் மார்க்சிஸ்ட் கலைக் குழுக்கள்

தமிழகத்தில் கால் நூற்றாண்டுக் கும் மேலாக, மக்கள் பிரச்சினை கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி வீதி நாடகங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் பணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேமு திக-மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார மேடைகளில் நாடகங் களை அரங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலைக் குழுக்கள் தயாராகி வருகின்றன.

சென்னை கலைக்குழு, விடியல் கலைக்குழு, பாரதி கலைக்குழு, புதுயுகம் கலைக்குழு, புதுகை பூபாளம் கலைக்குழு, தாமிரபரணி கலைக்குழு உள்ளிட்ட சுமார் 20 கலைக் குழுக்கள், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தை எடுத்துரைக்கும் வகையில் வீதி நாடகங்களை உருவாக்கி வருகின்றன.

வடசென்னையை சேர்ந்த விடியல் மற்றும் பாரதி கலைக் குழுக்கள் ஒரு வீதி நாடகத்தை உருவாக்கி, அதன் ஒத்திகையை, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே அலமாதியில் 3 நாட்கள் தொடர்ந்து நடத்தின.

சென்னை, கடலூர், காஞ்சி புரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விவரிக்கும் காட்சிகளுடன் அந்த வீதி நாடகம் தொடங்குகிறது.

அடுத்தடுத்த காட்சிகளில், முதல்வர் நாற்காலியை பிடிக்க துடிக்கும் பிரதான கட்சிகள், மதுக் கடையால் ஏற்படும் சீரழிவு, மணல் கொள்ளை, 2ஜி ஊழல், கிரானைட் கொள்ளை, வேலை யின்மை உள்ளிட்டவை நகைச் சுவை உணர்வோடு சித்தரிக்கப் படுகின்றன.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடக குழு ஒருங்கிணைப்பாளரும், மாநில கலை இலக்கிய உப குழு உறுப்பினருமான பிரளயன், மாநில கலை இலக்கிய உப குழு உறுப்பினர் இரா.தெ.முத்து ஆகியோர் கூறியதாவது:

1989 தேர்தலில் தொடங்கி அனைத்து தேர்தல்களிலும் மக்கள் பிரச்சினைகளை வீதி நாடகங்களாக மார்க்சிஸ்ட் கட்சியின் கலைக்குழுக்கள் அரங்கேற்றி வருகின்றன. கலைக் குழுக்களில் தொழிலாளர் கள், தொழிலாளர்களின் வாரி சுகள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், நாடக கலைஞர்கள் பங்கேற்று, தேர்தல் காலங்களில் தங்கள் அரசியல் பணியை மேற் கொள்கின்றனர்.

மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கலைக் குழுக்கள், வரும் சட்டப்பேரவை தேர்தலில், தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியின் பிரச்சார மேடைகளில், மக்கள் பிரச்சினை களை எடுத்துரைக்கும் வகையி லான நாடகங்களை அரங்கேற்ற தயாராகி வருகின்றன.

கலைக் குழுக்களை வரும் 22, 23, 24 ஆகிய தேதிகளில் ஒருங்கிணைத்து பயிற்சி முகாம் நடத்த உள்ளோம். அந்த முகாமில், கலைக் குழுக்கள் உருவாக்கியுள்ள வீதி நாடகங் களை செம்மைப்படுத்த திட்டமிட் டுள்ளோம். ஏப்ரல் 25-ம் தேதிக்கு மேல், எங்கள் கலைக் குழுக்களின் வீதி நாடகங்கள் பிரச்சார மேடை களில் அரங்கேறும். கரிசல் இசைக் குழு உள்ளிட்ட 10 இசைக் குழுக்களும் மக்கள் பிரச்சினை களை பாடல்க ளாக ஒலிக்க இருக் கின்றன என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x