Published : 02 Apr 2016 10:30 AM
Last Updated : 02 Apr 2016 10:30 AM

கவுரவக் கொலை செய்துவிடுவதாக மிரட்டல்: மகன், மருமகளுக்கு பாதுகாப்பு கோரி பழநி துணை வட்டாட்சியர் வழக்கு - போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு

பழநியில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்துகொண்ட பெண்ணை ஒப்படைக்கக் கோரி பெண்ணின் தந்தை விடுத்த மிரட்டலை எதிர்கொண்டு வரும் சிறப்புத் துணை வட்டாட்சியர், கலப்புத் திருமணம் செய்த அவரது மகன், மருமகள் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

பழநி சிறப்பு துணை வட்டாட்சியர் (கனிமம்) சி. தன்னாசிதுரை. இவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் ஆதிதிராவிட வகுப் பைச் சேர்ந்தவர்கள். என் மகன் கிஷோர்குமார். பி.இ. பட்டதாரி. இவர் மற்றொரு பிரிவைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மகள் சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சங்கீதாவை கடத்தி மகனுக்கு திருமணம் செய்து வைத்ததாக அழகர்சாமி 19.11.2015-ல் பழநி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் எங்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். கிஷோர்குமாரும், சங்கீதாவும் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகினர்.

அப்போது சங்கீதா, தன்னை யாரும் கடத்தவில்லை. நானாக விரும்பியே கிஷோர்குமாரை திருமணம் செய்து கொண்டேன் என தெரிவித்ததுடன், தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி தந்தையிடம் வழங்கி விடுதலைப் பத்திரம் எழுதியும் கொடுத்தார்.

பின்னர் தனக்கும், கணவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டு சங்கீதா, திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு மனு அனுப்பினார். அதில் தன்னையும், கணவரையும் தன் தந்தை கவுரவக் கொலை செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இருவரையும் ஒப்படைக்கா விட்டால், குடும்பத்துடன் கொலை செய்வதாக என்னையும் மிரட்டி வருகின்றனர்.

தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் என்னை விசார ணைக்கு வருமாறு போலீஸார் அடிக்கடி அழைத்து தொந்தரவு கொடுக்கின்றனர். உடுமலையில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த சங்கர் என்பவரை கொலை செய்ததுபோல கிஷோர்குமார், சங்கீதாவையும் கவுரவக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். எனவே விசாரணைக்கு அழைத்து தொந்தரவு செய்யக்கூடாது.

பாதுகாப்பு வழங்குமாறு பழநி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பி.என்.பிர காஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் னர், உடுமலைப்பேட்டையில் நடை பெற்றது போன்ற ஒரு சம்பவம் (சங்கர் கவுரவக் கொலை) இனிமேல் எங்கும் நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மனுதாரருக்கும், ஜாதி மறுப்பு திருமணம் செய்த இரு வருக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x