Published : 08 Feb 2022 10:21 AM
Last Updated : 08 Feb 2022 10:21 AM

நீட் விலக்கு மசோதா | தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியது: ஆளுநர் கடிதத்தை விளக்கி சபாநாயகர் உரை

சென்னை: நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியுள்ளது. அதில் சட்டப்பேரவை சபாநாயகர் ஆளுநரின் கடிதத்தை விளக்கை உரையாற்றினார்.

அதில் தொடக்க உரை ஆற்றிவரும் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு, "தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்ற அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திரும்பி அனுப்புள்ளார். உயர்மட்டக் குழுவின் அறிக்கை ஏற்புடையதாக இல்லை என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். காமாலைக் கண்ணால் பார்ப்பவர்கள் போல் அந்த அறிக்கை ஒருதலைப்பட்சமாக இருப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களுக்கு மட்டுமே தமிழகம் முக்கியத்துவம் அளிப்பதாக ஆளுநர் கூறியுள்ளார். நீட் தேர்வு முறையானது என்ற வகையில் ஆளுநர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்" எனக் கடித விவரங்களைப் பட்டியலிட்டு அதன் தமிழாக்கத்தை வாசித்தார்.

சபாநாயகர் கண்டனம்: ஆளுநர் அறிக்கை நேரடியாக சபாநாயகர் என்ற முறையில், எனக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டது. என் தரப்பிலிருந்து அது பேரவை உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டது. ஆனால், பேரவைக்கு ஆளுநர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை, பொதுவெளியில் வெளியிட்டு விவாதத்துக்கும் போராட்டத்துக்கும் வித்திட்டது ஏற்புடையதாகுமா என்பதை இவ்விஷயத்தில் சம்பந்தப்பட்டோர் யோசித்து பார்க்கவும் என்று சபாநாயகர் அப்பாவு கண்டனம் தெரிவித்தார்.

சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேரலை இங்கே:

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு செப்.13-ம் தேதி சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட முன்வடிவு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. ஆனால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், 142 நாட்களுக்குப்பின் கடந்த 1-ம் தேதி பேரவைத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பியனுப்பியதுடன், சட்டமுன்வடிவை மறு பரிசீலனை செய்யும்படியும் தெரிவித்திருந்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூடியுள்ளது.

தனிப்பட்ட முறையில் ஆளுநரை விமர்சிக்காமல் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவைப் பற்றி மட்டும் உறுப்பினர்கள் பேசுமாறு சபாநாயகர் வலியுறுத்தி விவாதத்தை துவக்கி வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x