Published : 02 Feb 2022 10:01 PM
Last Updated : 02 Feb 2022 10:01 PM

சாலை விதிமீறல்: தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட அபராதம் -மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சாலை விதிமீறல் தொடர்பான விவரங்கள் மற்றும் அபாரதங்களின் தொகைகளை வெளியிட்டார்.

"2018-ல் மொத்தம் 4,67,041 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 3,10,612 விபத்துகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதன் காரணமாக 12,018 விபத்துகளும், பாதை சரியில்லாததன் காரணமாக 24,781 விபத்துகளும், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 4,441 விபத்துகளும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கியதன் காரணமாக 9,039 விபத்துகளும், இதர காரணங்களால்1,06,150 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

2019-ம் ஆண்டில் மொத்தம் 4,49,002 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 3,19,028 விபத்துகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதன் காரணமாக 12,256 விபத்துகளும், பாதை சரியில்லாததன் காரணமாக 24,431 விபத்துகளும், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 4,443 விபத்துகளும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கியதன் காரணமாக 10,522 விபத்துகளும், இதர காரணங்களுக்காக 78,322 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

2020-ம் ஆண்டில் மொத்தம் 3,66,138 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் அதிக வேகத்தின் காரணமாக 2,65,343 விபத்துகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதன் காரணமாக 8,355 விபத்துகளும், பாதை சரியில்லாததன் காரணமாக 20,228 விபத்துகளும், சிவப்பு விளக்கை தாண்டியதன் காரணமாக 2,721 விபத்துகளும், செல்போனில் பேசிக்கொண்டு வாகனங்களை இயக்கியதன் காரணமாக 6,753 விபத்துகளும், இதர காரணங்களுக்காக 62,738 விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

இதேபோல், புதிய சட்டத்தின் வாயிலாக, சாலைவிதிகளை மீறியதற்காக நாடு முழுவதும் 1 செப்டம்பர் 2019 முதல் 31 டிசம்பர் வரை ரூ.550,73,02,804 அபராதமாகவும் 2020 ஜனவரி 1ம் தேதி முதல் 2020 டிசம்பர் 31 வரை ரூ.15,64,57,21,915 அபராதமாகவும், 2021 ஜனவரி 1 முதல் 2021 டிசம்பர் 31 வரை ரூ.21,04,29,52,569 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1 செப்டம்பர் 2019 முதல் 31 டிசம்பர் வரை ரூ.26,75,52,184 அபராதமாகவும், 1 ஜனவரி 2020 முதல் 31 டிசம்பர் 2020 வரை ரூ.87,04,10,836 அபராதமாகவும், 1 ஜனவரி 2021 முதல் 31 டிசம்பர் 2021 வரை ரூ.92,24,75,383 அபராதமாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x